குரங்கு வீடியோவை வெளியிட்ட எலான் மஸ்க் நிறுவனம்.. இது சாதா குரங்கு இல்லீங்க..!

குரங்கு வீடியோவை வெளியிட்ட எலான் மஸ்க் நிறுவனம்.. இது சாதா குரங்கு இல்லீங்க..!

எலான் மஸ்க்-ன் நியூராலிங்க்

எலான் மஸ்க் தலைமையிலான நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் பொருத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட மைக்ரோசிப்-களைத் தயாரித்து அதை வெற்றிகரமாக ஒரு குரங்கின் மூளையில் பொருத்திச் சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. இது இந்நிறுவனத்தின் முதல் முக்கியமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

 குரங்கு வீடியோ

குரங்கு வீடியோ

விலங்குகளிடம் இதுபோன்ற சோதனைகள் பல முறை நடத்தப்பட்டு உள்ளது. நியூராலிங்க் நிறுவனமே இதற்கு முன்பு 2 முதல் 3 முறை செய்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 2020ல் Gertrude என்ற பெயர் கொண்ட பன்றியின் மூளையில் இந்தச் சோதனை செய்யப்பட்டு வெற்றிகண்டது. ஆனால் முதல் முறையாக ஒரு குரங்கின் வீடியோவை பொது வெளியில் வெளியிட்டுள்ள காரணத்தால் இது மிகவும் ஸ்பெஷலாகப் பார்க்கப்படுகிறது.

 குரங்கின் மூளையில் சிப்

குரங்கின் மூளையில் சிப்

Pager என்ற பெயர் கொண்ட ஒரு குரங்கின் மூளையில் நியூராலிங்க் சிப் 6 வாரங்களுக்கு முன்பு பொருத்தப்பட்டது. இந்த வீடியோவின் படி சிப் பொருத்தப்பட்ட குரங்கு ஜாய்ஸ்டிக் (JoyStick) மூலம் ஒரு கேம் விளையாடுகிறது. ஒவ்வொரு முறை ஸ்கிரீனில் வரும் பந்தை ஆரஞ்சு பெட்டிக்குள் சேர்க்கும் போது சாப்பிட டியூப் வாயிலாக வாழைப்பழ கூழ் கொடுக்கப்படுகிறது.

 வீடியோ கேம் விளையாடும் குரங்கு

வீடியோ கேம் விளையாடும் குரங்கு

இப்படி ஒவ்வொரு முறையும் சரியாகப் பந்தை பெட்டிக்குள் சேர்க்கும் போது குரங்கின் மூளையில் பதிவாகும் பிரைன் வேவ்-ஐ சிப் பதிவு செய்து அருகில் இருக்கும் கம்பியூட்டருக்கு அனுப்புகிறது. இந்தச் சிக்னலை ஆய்வு செய்து மென்பொருளாக மாற்றிய பின்பு ஜாய்ஸ்டிக் (JoyStick) இல்லாமலே கேம்-ஐ குரங்கால் கன்ட்ரோல் செய்யப்படுகிறது.

 செயற்கை கை, கால்

செயற்கை கை, கால்

இதே தொழில்நுட்பத்தைக் கைகள் இல்லாதோருக்கு Neuralink brain implant வாயிலாகச் செயற்கை கைகளைச் சாதாரணக் கைகளாக இயக்க முடியும் என நியூராலிங்க் தெரிவித்துள்ளது. இதனால் உண்மையான கைகளும், செயற்கை கைகளும் வித்தியாசம் இல்லாத வகையில் இயங்க முடியும்.

 எலான் மஸ்க் ட்வீ ட்

எலான் மஸ்க் ட்வீ ட்

மேலும் இதுகுறித்து எலான் மஸ்க் தனது டிவிட்டரில் நியூராலிங்க் முதல் திட்டத்தின் வெற்றியின் மூலம் paralysis அதாவது முடக்குவாதம் உள்ளவர்களும் ஸ்மார்ட்போன் தங்களது மூளையின் வேகத்திற்கு ஏற்ப எளிதாக இயக்க முடியும், நடக்க முடியாதவர்கள் நடக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். சிப்-க்கான சார்ஜ்-ஐ வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்ய முடியும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

குரங்கு வீடியோவை வெளியிட்ட எலான் மஸ்க் நிறுவனம்.. இது சாதா குரங்கு இல்லீங்க..! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart