குதிரையாறு

குதிரையாறு

குதிரையாறு (Kuthiraiyar) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கூக்கால் பகுதியில் உருவாகும் சிற்றாறு ஆகும்.[1]ஆண்டிப்பட்டி கிராமத்தில் சிற்றருவியாக விழுந்து குதிரையாறு அணையில் தேங்கி அங்கிருந்து வடக்கு நோக்கி பாப்பம்பட்டி, ரெட்டையம்பாடி கிராமங்களின் வழியாக, சுமார் 10 கி.மீ.ஓடி, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கொழுமம் கிராமம் அருகில் அமராவதி ஆற்றோடு கலக்கிறது.[2]

பழங்காலப் பெயர்

சங்ககாலத்திற்குப் பின் இந்த ஆற்றுக்கு அசுவநதி என பெயர் வழங்கி வந்துள்ளது. (அசுவம்( வடமொழி) = குதிரை) இந்த அசுவநதி கொழுமம், அருகில் அமராவதி ஆற்றுடன் இணைந்து வடக்காக சென்று காவிரி ஆற்றுடன் இணைகிறது.

குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி

- 1
         பழனிக்கு அருகில் இருக்கும் கும்பை என்ற பகுதியிலிருந்து 1 கிமீ தூரத்தில் இந்த குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி இருக்கிறது. குதிரையாறு அணைக்குப் பின்புறம் இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது. பழனியில் இருக்கும் பாப்பம்பட்டிக்கு மிக அருகில் இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி மற்றும் இதை சுற்றி இருக்கும் பகுதிகளில் இயற்கை எழிலை அள்ளிப் பருகலாம். அதுபோல் இந்த நீர்வீழ்ச்சி பகுதிகளில் குறைவாக வசூலிக்கும் நல்ல உணவு விடுதிகள் உள்ளன.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password