குண்டாறு

குண்டாறு

குண்டாறு என்பது ஆறுகளுக்கு வைக்கப்படும் பெயராகு. இது குண்டான ஆறு என்பதன் சுருக்கம்.

 1. குண்டாறு (தேனி) – தேனி மாவட்டதில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தெடரில் அமைந்துள்ளது.
 2. குண்டாறு (அரிகர நதி) – குற்றாலத்தில் உற்பத்தியாகும் சிற்றாற்றின் இரண்டாம் நிலை இணையாறாகும்.

குண்டாறு (தேனி)

குண்டாறு (குண்டு+ஆறு) தமிழ் நாட்டில் உள்ள பருவ கால ஆறுகளுள் ஒன்று. தேனி மாவட்டதில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தெடரில் அமைந்துள்ள, ஆண்டிபட்டி மலையின் மலைச் சிகரங்கலில் ஓடிவரும் ஓடைகளில் இருந்து ஆண்டிபட்டி அருகில் கடல் மட்டத்தில் இருந்து 260 மீ. உயரத்தில் குண்டாறு உருவாகின்றது. இவ் ஆறானது உருவாகும் பகுதி மேல் குண்டாறு எனவும், வங்கக் கடலில் கலக்கும் பகுதி கீழ் குண்டாறு எனவும் அழைக்கப்படுகின்றது.

குண்டாறானது மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று தெற்கு மூக்கையூர் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. இதன் நீளம் 146 கி.மீ ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகளாக தெற்காறு காணல் ஓடை கிருதுமால் நதி மற்றும் பரலை ஆறுகள் ஆகும். குண்டாறானது ஒரு பருவ கால ஆறாகும்.

துணை ஆறுகள்

 • தெற்காறு
 • காணல் ஓடை
 • கிருதுமால் நதி
 • பரலை ஆறு

குண்டாறு (அரிகர நதி)

குண்டாறு என்பது குற்றாலத்தில் உற்பத்தியாகும் சிற்றாற்றின் இரண்டாம் நிலை துணையாறாகும். குண்டாறு சிற்றாற்றின் முதல் நிலை துணையாறான அரிகர நதியில் கலக்கிறது. அரிகர நதி சிற்றாற்றில் நேரடியாக தென்காசியில் இணைகிறது. இந்த ஆற்றின் மூலம் நேரடியாக 465.39 ஹெக்டேர்களும் குண்டாற்றின் துணையாறான மொட்டையாறு மூலம் மறைமுகமாக 141.64 ஹெக்டேர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதற்கு 7 அணைக்கட்டும் ஒரு தேக்கமும் உள்ளன.

இதற்கான தேக்கம் கண்ணுப்புளி மெட்டு அருவியின் அருகில் உள்ளது. இத்தேக்கம் சுற்றுலா பயனிகள் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுளதும் குறிப்பிடத்தக்கது.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password