கால்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்
பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ அழகாவதற்கான செயல்களை செய்கிறோம்.
ஆனால் அத்தகைய செயல்களை செய்யும் போது, கால்களை மட்டும் யாரும் முறையாக கவனிக்கமாட்டார்கள்.
உண்மையில் அழகு முகத்தில் மட்டும் இல்லை, அனைத்து பாகங்களுக்கும் உண்டு. அதிலும் பருவநிலை மாறினால் சருமத்தினால் உடனே அதற்கு ஒத்துழைக்க முடியாது. அதில் முதலில் பாதிக்கப்படுவது கால்கள் தான்.
அதிலும் வெயிலிலேயே சுற்றுபவர்கள் என்றால், அதிகபடியான வெயில் கால்களில் படுவதால், கால்கள் வறண்டு விடுகிறது. இதனை தடுக்க அதிக பணம் செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
தற்போது கால்களை பளிச்சென்று மாற்ற என்ன செய்யலாம் என பார்ப்போம்.
தேவையானவை
- எப்சம் உப்பு (அப்படியே கடைகளில் கிடைக்கும்) – 1 கப்,
- லேவண்டர் ஆயில் – 2 சொட்டு,
- குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.
செய்முறை
எப்சம் உப்பும், லேவண்டர் ஆயிலும் கலந்து, அதில் தண்ணீரை மிக மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கலக்கவும். அது பேஸ்ட் பதத்துக்கு வர வேண்டும்.
பாதங்களை கிரீம் கொண்டு மசாஜ் செய்த பிறகு இந்த ஸ்க்ரப் கொண்டு மிதமாகத் தேய்த்துக் கழுவினால் இறந்த செல்கள் அகன்று பாதங்கள் பளிச்சிடும்.
…
கால்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ் Source link