கலை, அறிவியல் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு- சென்டாக்

கலை, அறிவியல் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு- சென்டாக்

கலை, அறிவியல் மற்றும் நீட் தேர்வில்லாத பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை விபரங்களை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலை, அறிவியல் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு- சென்டாக்

கலை, அறிவியல் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு- சென்டாக்

நீட் தேர்வில்லாத கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகள், பிடெக், பிஎஸ்சி (ஹானஸ்), வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, உயிரியல் அடிப்படையிலான படிப்புகள், பி.பார்ம், சட்டத் துறை படிப்பான பிஏ. எல்எல்பி உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான மாணவர்களின் வரைவு தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஏஎன்எம் என்ற படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் மட்டும் தனியாக வெளியிடப்பட உள்ளது.

இதற்கான பட்டியலை விண்ணப்பதாரர்கள் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் காணலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அதை இணையதளத்தில் உள்ள shorturl.at/msIN1 என்னும் இணைப்பில் வருகிற 7- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்தான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் முகவரி மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களின் உள்நுழைவு கடவுச் சொல்லைப் பயன்படுத்தி சரிபார்ப்பு குறிப்புகளை பார்வையிடவும், தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் ஜூலை 4 -ஆம் தேதி முதல் 12- ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு- சென்டாக் Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password