- 1

கபசுத்தியை விரட்டியடிக்கும் கரிசாலை நெய் சித்த மருத்துவம்

115 0

கபசுத்தியை விரட்டியடிக்கும் கரிசாலை நெய் சித்த மருத்துவம்


சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை) எமன் என்ற பெயரில் அழைத்தார்கள். ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணியாக உள்ளது.


உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைந்து விடும். இரத்த ஓட்டம் தடைபடும். எலும்புகள் வலுவிழந்து விடும். நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் என்று சித்தர்கள் கூறினர்.


சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும்.


இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள்.


கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம். சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.


இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.


கபத்தை விரட்டியடிக்கும் கரிசாலை நெய் எப்படி செய்வது, எப்படி சாப்பிட்டவேண்டும் என்பதை பார்ப்போம்

  • கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு வாங்கி வந்து நன்றாக கழுவி அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்து ஒரு சுத்தமான நெய்யில் போட்டு சிறிது தூள் செய்த மிளகு சேர்த்து அடுப்பேற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும்.
  • இந்த நெய்யினை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும்.
  • இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும். கோழையை கழற்றுதல் என்பது இதுவே.
  • இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். ‘
  • இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் உடம்பில் சளி பிரச்சினை இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

கபசுத்தியை விரட்டியடிக்கும் கரிசாலை நெய் சித்த மருத்துவம் Source link

Related Post

- 3

கண்களை வைத்தே உங்களின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்?

Posted by - நவம்பர் 10, 2020 0
கண்களை வைத்தே உங்களின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்? நமது விருப்பங்களை கண்களால் எளிதில் புரிய வைக்க முடியும். அத்தகைய கண்களின் ஏதேனும் பிரச்சனை வந்தால்…
- 11

மதியம் சாப்பிட்டதும் தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அலர்ட் செய்தி

Posted by - அக்டோபர் 24, 2020 0
மதியம் சாப்பிட்டதும் தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அலர்ட் செய்தி தூங்காமல் இருப்பது அதிக நேரம் தூங்குவது என இரண்டுமே ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடியவை. பிற்பகல் தூக்கம் மாரடைப்பை…
- 13

சிறுநீரக கற்களை கரைக்கும் மூலிகை!

Posted by - நவம்பர் 19, 2020 0
சிறுநீரக கற்களை கரைக்கும் மூலிகை! சிறுநீரக் கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்துவதுடன், சில நேரத்தில் அந்த கற்கள் சிறுநீரகப் பாதையில் அடைத்துக் கொண்டு, சிறுநீர் கழிக்க முடியாமல்…
- 19

ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக இந்த ஆண்டு மூவருக்கு நோபல் பரிசு!

Posted by - அக்டோபர் 21, 2020 0
ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக இந்த ஆண்டு மூவருக்கு நோபல் பரிசு! ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த இருவர் மற்றும், பிரத்தானியாவை சேர்ந்த ஒருவர்…
- 21

சித்தரத்தை இரகசியம்: வாயு கோளாறை சரிசெய்யுமா?

Posted by - நவம்பர் 16, 2020 0
சித்தரத்தை இரகசியம்: வாயு கோளாறை சரிசெய்யுமா? சித்தரத்தை என்ற அழகான பெயரை கொண்ட இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. சித்தரத்தை குறுஞ்செடிகளை எளிதில் வீடுகளில் தொட்டிகளிலேயே…

உங்கள் கருத்தை இடுக...