- 1

ஓவியா செய்து கொண்ட கப்பிங் தெரபி பற்றி தெரியுமா?

127 0

ஓவியா செய்து கொண்ட கப்பிங் தெரபி பற்றி தெரியுமா?

கப்பிங் தெரபி என்பது பண்டைய கால சிகிச்சை முறை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சீனர்களால் உருவாக்கப்பட்டது என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

கண்ணாடி அல்லது மூங்கிலான கோப்பைகளை பயன்படுத்தி எலும்பு இடமாற்றம், தசைப்பிடிப்பு, காய்ச்சல் உடல்வலி, ரத்த சுத்திகரிப்பு மற்றும் மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைக்கு கப்பிங் தெரப்பி சிகிச்சையால் குணப்படுத்த முடியும்.

கப்பிங் தெரப்பி மூன்று வகைப்படும்

  • உலர்ந்த கப்பிங்
  • நெருப்பு கப்பிங்
  • ஈரமான கப்பிங்
உலர்ந்த கப்பிங் தெரப்பி

முறைான ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவது மற்றும் தசை பிடிப்புகளைச் சரி செய்வது போன்ற பலன்களை வழங்கக் கூடியதே உலர்ந்த தெரப்பியாகும், பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் இச்சிகிச்சையை மேற்கொள்வர்.

- 3

நெருப்பு கப்பிங்

சிறு உருண்டை வடிவிலான பஞ்சை சுத்தமான சாராயத்தில் நனைத்து நெருப்பைப் பற்றவைத்து கண்ணாடிக் குவளையை தோலுடன் சேர்த்து அளுத்துவதேயாகும், இவ்வாறு செய்வதனால் தசைப்பிடிப்பு, கழுத்து வலி, கவலை ஒற்றைத் தலைவலி, வாதம் போன்ற நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

- 5

ஈரமான தெரப்பி

தோலின் மேற்பரப்பில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி அதன் வழியாக் தூய்மையாற்ற ரத்தக் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றுவது ஒரு முறையாகும்.

நமக்கு வரக்கூடிய பல நோய்களை மறைமுகமாகவோ நேரடியாகவே ரத்தத்துடன் தொடர்புபட்டு அதன் அடிப்படையில் தூய்மையற்ற ரத்தத்தை நீக்குவதன் மூலமாக நோய்கள் குணமடைய வாய்ப்புண்டு.

- 7

கப்பிங் தெரப்பி செய்து கொண்ட பிரபலங்கள்

ஒலிம்பிக் போட்டியில் 22 தங்கப்பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் தசைப்பிடிப்பு மற்றும் சுளுக்கு காரணமாக கப்பிங் தெரப்பி செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா கப்பிங் தெரப்பி செய்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியானது.

மன அழுத்தத்தை போக்குமா கப்பிங் தெரப்பி?

மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்தால் சிலருக்கு தற்கொலை எண்ணம் வரும், கப்பிங் தெரப்பி நமது உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை நமது உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது.

எனவே உடல் ரீதியான பிரச்சனைகள் சரியாகி மன ரீதியான அழுத்தத்தை குறைக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

கப்பிங் தெரப்பியின் பக்க விளைவுகள்

கப்பிங் தெரப்பி செய்த பின்னர் சருமத்தில் ஏற்படும் வட்ட வடிவிலான தழும்புகளை சரியாக பராமரிக்காவிட்டால் நோய்த்தொற்று அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

எனவே இந்த சிகிச்சை முறையை செய்து கொள்ள விரும்பினால் மருத்துவரும், இடமும் மிக முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

- 9

– Dina Mani

ஓவியா செய்து கொண்ட கப்பிங் தெரபி பற்றி தெரியுமா? Source link

Related Post

- 11

முடி கொட்டுகிறதா? கவலையை விடுங்கள்

Posted by - நவம்பர் 30, 2020 0
முடி கொட்டுகிறதா? கவலையை விடுங்கள் முடி கொட்டுகிறதா? மிகவும் கஸ்ட்டப்படுரீங்களா? கவலையை விடுங்கள். எம் வீட்டிலேயே காணப்படும் சில பொருட்களை கொண்டு முடியை சீக்கிரம் வளர்த்துக் கொள்ளலாம்.…
- 19

8 மருத்துவ குறிப்புகள்!

Posted by - நவம்பர் 21, 2020 0
8 மருத்துவ குறிப்புகள்! ஆரோக்கிய வாழ்க்கைக்கு சில மருத்துவகுறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள், தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.…
- 21

யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா?

Posted by - அக்டோபர் 30, 2020 0
யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா? மாம்பழத்தைப் பார்த்தாலே பலருக்கும் வாயில் இருந்து எச்சில் ஊறும். பழங்களின் ராஜா தான் மாம்பழம். இந்த மாம்பழம் கோடையில்…
- 23

மிக பயனுள்ள எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்

Posted by - அக்டோபர் 31, 2020 0
மிக பயனுள்ள எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள் உடம்பு சரியில்லையென்றால் உடனே மருந்து கடைகளுக்கு போய் ஏதோ மாத்திரை வாங்கி போடுவதை இப்போதிலிருந்தே நிறுத்துங்கள். மருந்து, மாத்திரைகளை…
- 25

தினமும் செய்தால் போதும்!!! தொப்பை தானாகவே குறையும்

Posted by - நவம்பர் 10, 2020 0
தினமும் செய்தால் போதும்!!! தொப்பை தானாகவே குறையும் வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். மேலும்…

உங்கள் கருத்தை இடுக...