ஒரே இரவில் பருக்களை விரட்டணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

ஒரே இரவில் பருக்களை விரட்டணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுவாக இன்றையகால இளைஞர்கள் பெரும்பாலும் பரு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்.

நமது முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெய் பசை தன்மை முகப்பருக்களை உண்டாக்குகிறது.

அழுக்கு, சுற்றுச்சூழல் மாசுக்கள் போன்றவை சரும துளைகளை அடைத்து முகப்பருக்களையும் அதனுடன் வலியையும் ஏற்படுத்துகிறது. இவை தழும்புகளை உண்டாக்கி முகத்தின் அழகையும் கெடுத்து விடும்.

எனவே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகப்பருக்களை நீக்குவது சிறந்தது. தற்போது பக்கவிளைவுகள் இல்லாத ஒரு சில இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

 • கொஞ்சமாக தேனை எடுத்து முகத்தில் உள்ள பருக்களில் அப்ளே செய்யுங்கள். இரவு முழுவதும் அதை விட்டு விடுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் அதை கழுவுங்கள். நன்மை கிடைக்கும்.
 • 2 சொட்டுகள் டீ ட்ரி ஆயிலை 10 சொட்டுகள் தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து மருக்களின் மீது தடவுங்கள். அதை சில மணி நேரம் அப்படியே வைத்து இருங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவுங்கள்.
 • ​க்ரீன் டீயில் பாலிபீனால் ஈ.ஜி.சி.ஜி (எபிகல்லோகாடெசின் காலேட்) உள்ளது. இது பருக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
 • கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் பருக்களின் மீது தடவிக் கொள்ளுங்கள். இதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
 • 2-3 டீ ஸ்பூன் தேன் , 1 டீ ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் இந்த இரண்டு பொருட்களையும் ஒரு பெளலில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சை இதில் நனைத்து முகப்பருக்கள் மீது வையுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும். இதுவும் உங்க முகப்பருக்களை குறைக்க உதவுகிறது.
 • எலுமிச்சை சாற்றை சிறிது நீரில் நீர்த்துப் போகச் செய்யுங்கள். அதை ஒரு காட்டன் பஞ்சில் எடுத்து பருக்களின் மீது அப்ளே செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவி விடுங்கள்.
 • 1 அஸ்பிரின் மாத்திரையை நன்றாக நொறுக்கிக் கொள்ளுங்கள். அதை சில துளிகள் விட்டு மென்மையான பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதை பாதிக்கப்பட்ட பருக்களின் மீது தடவுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியே அதை காய விடவும். பிறகு நீரைக் கொண்டு நன்றாக கழுவி விடுங்கள். பிறகு முகம் நன்றாக காய்ந்ததும் மாஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள்.
 • ஐஸ் கட்டிகள் உங்க முகப்பருக்களை குறைக்க பயன்படுகிறது. இது வலி மற்றும் அசெளகரியத்தை போக்கும். பருக்களின் மீது ஆற்றும் பண்பை தருகிறது.
 • ஒரு சுத்தமான துணியில் ஐஸ் கட்டிகளை கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஐஸ் கட்டிகளை பருக்களின் மீது ஒத்தடம் கொடுங்கள். இது உங்க சருமத்தில் உள்ள பருக்களை விரட்ட உதவுகிறது.இது சருமத்தை உலர்த்தி பிரச்சினையை சரி செய்கிறது.
 • 1 டீ ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி ,1-2 டீ ஸ்பூன் தேன் ,2 டேபிள் ஸ்பூன் பால் மேற்கண்ட பொருட்களை எல்லாம் ஒரு பெளலில் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சை எடுத்து அதில் நனைத்து முகத்தில் அப்ளே செய்யுங்கள் 10-15 நிமிடங்கள் அதை விடவும். பிறகு நீரைக் கொண்டு கழுவுங்கள். பிறகு அதற்கு மாஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள்.

ஒரே இரவில் பருக்களை விரட்டணுமா? இதோ சூப்பர் டிப்ஸ் Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart