ஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..?

ஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..?

மக்களுக்கு ஆப்பு

மக்களுக்கு ஆப்பு

சமீபத்தில் வரலாற்றில் பட்டம் பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சக்திகாந்த தாஸ் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றார். இந்தியாவின் விலை வாசிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் அரிய பெரிய பணியை ஆர்பிஐ தான் கண்கானித்து செய்து வருகிறது. “மத்திய அரசுடன் ஆர்பிஐ நெருக்கமாக செயல்படும்” என சக்திகாந்த தாஸ் தன் விஸ்வாசத்தைக் காட்டிய போது தான் விலை ஏற்றத்தைப் பற்றிய பயமே வருகிறது. ஆர்பிஐ ஒருவேளை மோடி போன்ற திறமைசாலிகளின் சொல் பேச்சைக் கேட்டு அபரீவிதமாக செயல்பட்டு விலை வாசிகளை கட்டுப்படுத்தத் தவறினால்… இன்று பயன்படுத்தும் சில அன்றாட பொருட்கள், சேவைகள் மற்றும் கட்டணங்களின் விலை என்ன ஆகும். ஒரு பார்வை.

தங்கம் விலை

தங்கம் விலை

1964-ல் 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை (24 கேரட்) 64 ரூபாய். 2017-ல் அதே 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை (24 கேரட்) 29,667 ரூபாய். ஆக கடந்த 54 ஆண்டுகளின் தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்திருக்கிறது கண்டு பிடிங்களேன்… விடையைக் கண்டு நீங்கள் அதிர்ச்சி அடைந்தால் சரியான விடையைக் கண்டு பிடித்திருக்கிறீர்கள்.

கணக்கீடு

கணக்கீடு

29,667 / 64 = 463.55 மடங்கு விலை அதிகரித்திருக்கிறது. கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. இந்த கணக்கீடை எடுத்துக் கொள்ள வேண்டாம். கடந்த ஐந்ம்பது ஆண்டுகளில் எவ்வளவோ காரணங்களால் இந்த விலை ஏற்றம் நடந்திருக்கலாம். ஆக லேட்டஸ்டாக கடந்த 10 ஆண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

10 ஆண்டு கணக்கு

10 ஆண்டு கணக்கு

2008-ல் அதே 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை (24 கேரட்) ரூ. 12,500 ரூபாய். 2018-ல் 29667 ரூபாய். இப்போது கணக்கிடுவோம். 29667 / 12500 = 2.37 மடங்கு விலை அதிகரித்திருக்கிறது. ஆக 237 சதவிகிதம். அதை ஒரு ஆண்டுக்கு கண்டு பிடிக்க 10-ல் வகுத்தால் 23.7 சதவிகிதம். சரி இதை ஒரு விலை வாசி கணக்காகக் கொள்வோம். ஆனால் இன்னொரு கணக்கீட்டையும் எடுத்துக் கொள்வோம்.

CPI

CPI

CPI என்றால் Communist Party of India அல்ல, Consumer Price Index. இது மக்களை விலை வாசி குறைவாகத் தான் இருக்கிறது என அரசு ஏமாற்ற வசதியாக இருக்கும் ஒரு விஷயம். சர்வதேச அளவில் சாதாரண மக்களுக்கு உதவாத இந்த சிபிஐ தான் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த உதவாத கணக்கீட்டையும் எடுத்துக் கொள்வோம்.

10 வருட சராசரி

10 வருட சராசரி

2008 – 8.32, 2009 – 10.83, 2010 – 12.11, 2011 – 8.87, 2012 – 9.30, 2013 – 10.92, 2014 – 6.37, 2015 – 5.88, 2016 – 4.97, 2017 – 2.49. இந்த தரவுகளை எல்லாம் கூட்டினால் 80.06. அதை 10-ல் வகுத்தால் 8.006. ஆக 8 சதவிகிதம் இனி வரும் ஆண்டுகளில் விலை வாசி அதிகரிக்கும் என கணக்கைத் தொடங்குவோம்.

இப்படித் தான் பார்க்கணும்

இப்படித் தான் பார்க்கணும்

இப்போது நாம் இரண்டு விலை ஏற்றங்களைப் பார்க்க இருக்கிறோம். ஒன்று மத்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும் நுகர்வோர் விலை ஏற்றத்தை அடிப்படையாகக் கொண்டு ஆர்பிஐ கணிக்கும் ஆண்டுக்கு 8% விலை ஏற்றம். மற்றொன்று தங்கத்தின் விலை ஏற்றமான ஆண்டுக்கு 23.7 சதவிகிதம். இந்த இரண்டையும் இன்றைய செலவுகளோடு கணக்கிட இருக்கிறோம்.

அண்ண ஸ்ட்ராங்கா ஒரு டீ

அண்ண ஸ்ட்ராங்கா ஒரு டீ

இன்று கடுப்பாகும் போது எல்லாம் ஓடிப் போய் ஒர் டீ போடச் சொல்கிறோம். இன்றும் சென்னையில் சராசரியாக எட்டு ரூபாய்க்கு நல்ல டீ கிடைக்கிறது. ஆனால் 2060-ல் என்ன ஆகும். இன்று எட்டு ரூபாய்க்கு விற்கும் டீ ஆர்பிஐ கணக்குப் படி 2060-ல் 203 ரூபாய் ஆகும். தப்பித் தவறி தங்கத்தின் விலை ஏற்றம் போல அதிகரித்தால் ஒரு க்ளாஸ் டீயின் விலை 60,620 ரூபாய். இந்தியாவும் ஜிம்பாபே போல ஒரு கட்டு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுக்க வேண்டி இருக்கும். முழுமையான விலை ஏற்றத்தை மேலே படத்தில் பார்க்கவும்

அப்படியே ஒரு கிங்ஸ் கொடுங்க

அப்படியே ஒரு கிங்ஸ் கொடுங்க

டீ குடித்தால் சும்மாவா குடிக்க முடியும். அப்படியே ஒரு தம் போட்டால் தானே டீ குடித்த பலனே உண்டு. ஆக ஒரு கிங்ஸை இன்று 17 ரூபாய் கொடுத்து வாங்கி பற்ற வைக்கிறீர்கள். சக்திகாந்த தாஸ் போன்ற உயர் தர சால்ட்ராக்கள் ஆர்பிஐ-யை பாஜகவின் அமைப்பாக மாற்றி விலை வாசி ஏறினால் ஆர்பிஐ கணக்குப் படி 2060-ல் ஒரு கிங்ஸ் விலை 431 ரூபாய். தங்கம் விலை ஏற்றப் படி 1,28,818 ரூபாய். ஜெய் மோடி ஜி. ஜெய் சக்தி காந்த தாஸ்.

நிரந்தர வில்லன்

நிரந்தர வில்லன்

உலக அளவில் எரிபொருட்கள் மீதான பிரச்னை இன்று வரை தீரவில்லை, இனி தீரப் போவதும் இல்லை. சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு சரிவு தான் கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுத்து வாங்க வைக்கிறது. இதற்கு எல்லாம் முடிவு கட்டாமல், நான் சொல்றத கேட்குறவன் தான் ஆளுநரா இருக்கணும் என லோக்கல் பாலிடிக்சில் ஈடுபடுகிறார் தி கிரேட் மோடி.

ராக்கெட் பெட்ரோல்

ராக்கெட் பெட்ரோல்

ஆக பெட்ரோலும் தன் போக்கில், ரிலையன்சின் பாதையில் பயணித்தால் என்ன ஆகும். ஆர்பிஐ கணிப்புப் படி ஒரு லிட்டர் பெட்ரோல் 1,848 ரூபாய்க்கு ரேஷனில் கிடைக்கும். தங்கம் விலை ஏற்ற கணக்குப் படி 5,52,705 ரூபாய் என விண்ணைத் தொடும். முழு விலை ஏற்றத்தை மேலே படத்தில் காணவும்.

காலை டிஃபன்

காலை டிஃபன்

நம் அப்பா, அம்ம ஊரில் இருந்து வருகிறார்கள், அவர்களுக்கு நாம் தினமும் சாப்பிடும் ரோட்டுக் கடை இட்லியை வாங்கிக் கொடுக்க மாட்டொம் தானே. ஆக ஏதோ ஒரு (சரவண பவன், ஆனந்த பவன், வசந்த பவன்) பவனுக்கு அழைத்துச் சென்று நான்கு இட்லி மட்டும் சாப்பிட வேண்டும் என்றால் மிகக் குறைந்தபட்சம் 40 ரூபாய்.

இனி வீட்ல சாப்டுக்குறோம்

இனி வீட்ல சாப்டுக்குறோம்

ஒரு ஏழைத் தாயின் மகன், ஒரு டீக் கடைக் காரன் நாட்டை அத்தனை அழகாக வழி நடத்துகிறார். அவருடைய ஆர்பிஐ கவர்னர் எல்லாம் வரலாறு படித்தவர்கள். பெரிய புத்திசாலிகள். ஆனால் பாவம் பொருளாதாரம் தெரியாது. குறிப்பாக மக்கள் பொருளாதாரம் தெரியாது. ஆனால் பெரு நிறுவனங்களின் பொருளாதாரம் தெரியும். அப்படி மக்கள் விலை வாசியை கண்டு கொள்ள வில்லை என்றால் … மேலே படத்தில் கொடுத்திருக்கும் விலை வாசி பட்டியலைக் காணவும்.

கல்லூரி செலவுகள்

கல்லூரி செலவுகள்

“என் காலத்துல வெறும் 250 ரூவால காலேஜ் படிச்சேன்” என பெருமை பேசும் அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பாவைப் பார்க்கலாம். அவ்வளவு பின்னோக்கிப் போக வேண்டாம். இன்று கல்லூரியில் இருந்து வெளியே வந்த மாணவர்களைக் கேளுங்கள் பெரிய பெரிய கல்லூரிகள் வேண்டாம். சாதாரண கிராம புற தனியார் கல்லூரிகளில் கூட இளங்களைப் பட்டப் படிப்பை 50,000 செலவழித்துப் படிக்க வேண்டும் (மூன்று ஆண்டுகள் சேர்த்து).

கல்விதான் காசு

கல்விதான் காசு

படிச்சவன் எல்லாம் பக்கோடா போடப் போங்கடா எனச் சொன்ன கல்வித் தந்தை மோடி & அமித் ஷா டீமுக்கு கல்வியின் தேவையே தெரியவில்லை போல. சரி இன்று 50,000 கொடுத்து இளங்களை பட்டத்துக்கு செலவழிக்கும் நபர்கள், 2060-ல் விலை ஏற்றத்தால் ஆர்பிஐ-ன் சிபிஐ பணவீக்கப்படி 12,66,974 ரூபாய் ஆகும், தங்கம் விலை ஏற்றப் படி 37,88,76,256 தேவைப்படும். என்ன செய்ய எல்லாம் தலை விதி தான்..? முழு கட்டன விலை ஏற்றத்தை மேலே படத்தில் காணலாம்.

திருமணம்

திருமணம்

அம்மா, அப்பா உடன் இருக்கும் போது ஆணுக்கோ பெண்ணுக்கோ.. சம்பாதிப்பது தவிர குடும்ப சுமைகள் எல்லாம் அத்தனை தெரிவதில்லை தான். ஆக முதலில் ஒரு சாதாரண திருமணத்துக்கு எவ்வளவு செலவாகும் என நினைக்கிறீர்கள். மிகச் சிக்கனமாக ஒரு ஐந்து லட்சம் ரூபாய் வைத்துக் கொள்வோம். அதில் விருந்து செலவு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் வைத்துக் கொள்வோம்.

விருந்து செலவு விவரங்கள்

விருந்து செலவு விவரங்கள்

2060-ல் இதே ஐட்டங்களை மட்டும் வரும் விருந்தினர்களுக்கு கொடுக்க 25,33,948 ரூபாய் செலவாகும். தங்கம் விலை ஏற்றம் கணக்கிட்டால் 75,77,52,511 ரூவா செலவாகும். முழு விவரத்தை மேலே படத்தில் பார்க்கலாம்.

பிரசவம்

பிரசவம்

திருமணம், தாம்பத்தியம் முடிந்து அன்பின் அடையாளமாக ஒரு குழந்தையை மருத்துவமனையில் பெற்றெடுக்க இன்று குறைந்தபட்சம் 60,000 ரூபாய் என வைத்துக் கொண்டால் கூட 2060-ல் 15,20,369 ரூபாய் தேவைப்படும். தங்கம் விலை ஏற்றத்தைக் கணக்கிட்டால் 45,46,51,507 ரூபாய் தேவைப்படும். விவரங்கள் மேலே படத்தில்.

எப்பா எவ்வளவு தான் சம்பாதிக்கணும்

எப்பா எவ்வளவு தான் சம்பாதிக்கணும்

இது நல்ல கேள்வி, நம்ம மத்தியில் காங்கிரஸோ பிஜேபியோ யார் ஆண்டாலும் சரி.. மாநிலத்தில் எடப்பாடியோ, அய்யாத்துரை ஸ்டாலினோ யார் ஆண்டாலும் விலை வாசியை முறையாக கட்டுப் படுத்த வேண்டும் அப்படி இல்லை என்றால்… மேலே அட்டவனையில் கொடுத்திருக்கும் அளவுக்கு ஆண்டுக்கு ஆண்டு சம்பளம் உயர வேண்டும்.

சம்பள கணக்கீடு

சம்பள கணக்கீடு

இன்று மாதம் 40,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர், சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு சாதாரண வாழ்கையைத் தான் வாழ முடிகிறது. சம்பளத்துக்கு என வந்த பின், நிறுவனங்கள் சொல்வது தான். அதன் பின் சொந்த ஊர் எல்லாம் பிக்னிக் போய் வரும் இடம் தான். ஆகவே இன்று ஒருவர் 40,000 ரூபாய் வாங்கி எப்படி சாதாரன வாழ்கையை வாழ்கிறாரோ..! அதே சாதாரன வாழ்கையை 2060 வரை தொடர மேலே அட்டவனையில் கொடுத்திருக்கும் அளவுக்கு சம்பாதிக்க வேண்டும். மன்னியுங்கள் ராஜா… இதை ஆர்பிஐயே ஏற்றுக் கொண்டது.

ஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..?

VIew Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart