ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு ஜூலை 8 முதல் கலந்தாய்வு!

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு ஜூலை 8 முதல் கலந்தாய்வு!

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த பி.ஏ., எல்.எல்.பி. இளநிலை சட்டப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 8-ஆம் தேதி தொடங்குகிறது.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு ஜூலை 8 முதல் கலந்தாய்வு!

இதுறித்தான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, முதல் கட்டமாக, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு கலந்தாய்வை நடத்தியது.

அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு தனியார் கல்லூரியில் இடம்பெற்றிருக்கும் 1,411 ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, வரும் ஜூலை 8-ஆம் தேதி தொடங்கும் இந்த கலந்தாய்வு 11-ஆம் தேதி வரை நடைபெறும். இதையடுத்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 16ம் தேதியன்று நடத்தப்படவுள்ளது. இதற்கான கட்-ஆஃப் மதிப்பெண், தேதி உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு ஜூலை 8 முதல் கலந்தாய்வு! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
    Shopping cart