- 1

ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்த நுங்கு ! இந்த நோய்கள் எல்லாம் தீர்க்குமாம்

125 0

ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்த நுங்கு ! இந்த நோய்கள் எல்லாம் தீர்க்குமாம்

‘வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.

நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

இதில் பல மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • நுங்குக்கு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உண்டு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
  • நுங்கில் உள்ள நீரானது பசியை தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு நுங்கு அருமருந்தாகும்.
  • சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, அதிக தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அப்படியானவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.
  • ரத்தச்சோகை உள்ளவர்கள் தொடர்ந்து நுங்கை சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
  • வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது நுங்கு.
  • வெயில் காலத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும், நம் உடலை பாதுகாக்கும் சத்துக்கள் இதில் அதிகம். பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
  • நுங்கை இளநீருடன் ஜூஸ் போல அருந்தலாம். சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன், சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாக பசி எடுக்கும்.
  • சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் சரியாகும்.
  • நுங்கை அரைத்து தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால் அல்சர், வயிற்றுப்புண் பிரச்சினைகள் தீரும்.

ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்த நுங்கு ! இந்த நோய்கள் எல்லாம் தீர்க்குமாம் Source link

Related Post

- 3

நோய்களிலிருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழ இதோ எளிய சில வீட்டு மருத்துவ குறிப்புக்கள்!

Posted by - நவம்பர் 7, 2020 0
நோய்களிலிருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழ இதோ எளிய சில வீட்டு மருத்துவ குறிப்புக்கள்! மழைக்காலமோ, வெயிற்காலமோ எங்கு பார்த்தாலும் யாராவது ஒருவராவது நோய்வாய்ப்பட்டு காணப்படுவார்கள். இதற்காக நூற்றில்…
- 5

ஹேர் டையை நீண்ட காலமாக பயன்படுத்துபவரா நீங்கள்? இதனை உடனே படியுங்கள்

Posted by - நவம்பர் 17, 2020 0
ஹேர் டையை நீண்ட காலமாக பயன்படுத்துபவரா நீங்கள்? இதனை உடனே படியுங்கள் நரைமுடியை கருநிறமாக மாற்ற பயன்படுத்தப்படும் Hair Dye-யினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அலர்ஜியை உண்டாக்கும்.…
- 15

உடலில் இந்த 6 இடத்தை அழுத்துங்கள்: ஏற்படும் மாற்றம் பாருங்கள்

Posted by - நவம்பர் 22, 2020 0
உடலில் இந்த 6 இடத்தை அழுத்துங்கள்: ஏற்படும் மாற்றம் பாருங்கள் ஆயுர்வேதத்தில் அக்குபிரஷர், அக்குபஞ்சர் போன்ற பிரபலமான பல்வேறு மருத்துவ முறைகள் உள்ளது. அதில் அக்குபஞ்சர் என்பது…
- 29

ஓயாத இருமலால் அவதியா? இதோ சூப்பரான வீட்டு மருந்து!

Posted by - நவம்பர் 28, 2020 0
ஓயாத இருமலால் அவதியா? இதோ சூப்பரான வீட்டு மருந்து! தற்போது மாறி வரும் பருவ நிலையானது பல்வேறு உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் இப்போது இருக்கும்…
- 33

தாங்க முடியாத தலைவலி: உடனே போக்க இதை செய்யுங்கள்

Posted by - நவம்பர் 22, 2020 0
தாங்க முடியாத தலைவலி: உடனே போக்க இதை செய்யுங்கள் தாங்க முடியாத தலைவலி பிரச்சனையில் இருந்து உடனே விடுபட சில அற்புத வழிகள், தலைவலியை போக்குவது எப்படி?…

உங்கள் கருத்தை இடுக...