எவரையும் ஏளனம் நீ செய்யாதே – குழந்தை பாட்டு

758 0

மனிதர் வெறுக்கும் சேற்றிலே
மலர்ந்து நிற்கும் தாமரை;
புனிதமான கடவுளை
பூசை செய்ய உதவுதே!

அழுக்கடைந்த சிப்பியில்
அழகு முத்தைக் காணலாம்;
கழுத்தில் நல்ல மாலையாய்
கட்டி மகிழ உதவுதே!

கன்னங்கரிய குயிலிடம்
காது குளிரும் கீதமோ;
இன்பம் இன்பம் என்றுதாம்
இன்னும் கேட்க செய்யுதே!

விசத்தில் மிக்க பாம்பிடம்
விலையுயர்ந்த இரத்தினம்;
அடடா அந்த இரத்தினம்
மனிதருக்கும் கிட்டுமோ?

ஊசி போன்ற முள்ளிலே
உயர்ந்த ரோசா மலருதே;
வீசி நல்ல மணத்திலே
விரும்பி அணிய செய்யுதே!

மோசமான இடத்திலும்
மிகுந்த நல்ல பொருளுண்டு;
யோசிக்காமல் எவரையும்
ஏளனம் நீ செய்யாதே!

குழந்தை பாடல்கள் – தமிழ் DNA

எவரையும் ஏளனம் நீ செய்யாதே

Related Post

ஆள் தேடுதல் – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
தெருத்தெருவாய் தேடி வாறான் – ஏலங்கிடி லேலோதிண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1 சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து – ஏலங்கிடி லேலோசயிக்கினையும் செஞ்சுவாறான் -ஏலங்கிடி லேலோ…

மயிலே மயிலே – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
மயிலே, மயிலே ஆடிவாமக்காச் சோளம் தருகிறேன்!குயிலே, குயிலே பாடிவாகோவைப் பழங்கள் தருகிறேன்! பச்சைக் கிளியே பறந்துவாபழுத்த கொய்யா தருகிறேன்!சிட்டுக் குருவி நடந்துவாசட்டை போட்டு விடுகிறேன்! ஓடைக் கொக்கு…

மழையை நம்பி ஏலேலோ – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசாமண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசாமரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசாகிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசாஇலையைநம்பி ஏலேலோ பூவிருக்க…

பெண்ணுக்கு அறிவுரை – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணேஅறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணேநேத்துவந்தவன் கொண்டுபோனான் -சுண்டெலிப்பெண்ணே 2 அதனாலேதான் பயமாஇருக்கு -சுண்டெலிப்பெண்ணேஅக்கம்பக்கம் போகாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 3 கண்ணடிக்கிற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணேகண்ணெடுத்துப்…

விடிவெள்ளி நம்விளக்கு – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசாவிரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசாஅடிக்கும் அலையே நம்தோழன் – ஐலசாஅருமைமேகம் நமதுகுடை – ஐலசாபாயும் புயல் நம்ஊஞ்சல் – ஐலசாபனிமூட்டம் உடல்போர்வை –…

உங்கள் கருத்தை இடுக...