- 1

எறும்பும் வெட்டுக்கிளியும்

98 0

சிறுவர் நீதி கதைகள்

எறும்பும் வெட்டுக்கிளியும்

எறும்பும் வெட்டுக்கிளியும் The Ant and the Grasshopper

 மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது.

அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்” என்றது.

வெட்டுக்கிளி எறும்பிடம் “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்” என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.

நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது.

தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது.

அப்போது வெட்டுக்கிளிக்கு “எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்” என்ற எண்ணம் வந்தது.

வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.

தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது.

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

நீதி: கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.

சிறுவர் நீதி கதைகள்

எறும்பும் வெட்டுக்கிளியும்

Related Post

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 12. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! நாற்பது ஆண்டுகட்குமுன் பள்ளிப்பாடப் புத்தகத்தில் உள்ள கதை இது. வயதான தன் தந்தையைத் தெருத்திண்ணையில்…

97. மனித குணம்

Posted by - ஏப்ரல் 19, 2020 0
அறிவு கதைகள் 97. மனித குணம் நபிகள் நாயகம் ஒருநாள் மாலைநேரத்தில் பள்ளி வாசலுக்குத் தொழப் போனார்கள். அங்குள்ள தண்ணிரி தொட்டியில் கைகால்களை சுத்தம் செய்யும் பொழுது…

அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை 4-3

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை 3. அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை ஒரு காட்டில் ஒரு சிங்கம் அரசு புரிந்து வந்தது. அதன் அமைச்சனாக ஒரு நரி…

நரியும் பூனையும்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
நரியும் பூனையும் 21. நரியும் பூனையும் காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது. நட்பு…
- 4

தவளையும் சுண்டெலியும்

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் தவளையும் சுண்டெலியும் தவளையும் சுண்டெலியும் The Mouse, the Frog, and the Eagle Story in Tamil   அது ஒரு அழகிய…

உங்கள் கருத்தை இடுக...