எத்தனை வயது குழந்தைகளுக்கு., எப்படி ஆதார் கார்ட் எடுப்பது?- இதோ எளிய வழிமுறைகள்!

எத்தனை வயது குழந்தைகளுக்கு., எப்படி ஆதார் கார்ட் எடுப்பது?- இதோ எளிய வழிமுறைகள்!

பிரதானமாக இருக்கும் ஆதார் கார்ட்

பிரதானமாக இருக்கும் ஆதார் கார்ட்

வங்கிகள் கணக்குகளில் தொடங்கி சிம் கார்டு வாங்குவதன் மூலம் பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் கார்டு பிரதானமாக இருந்து வருகிறது. சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட ஆதார் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆதார் கார்டு அத்தியாவசியமான ஆவணங்களாக மாற்றப்பட்டு வருகிறது. வங்கி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என அனைத்துக்கும் ஆதார் கார்டு முக்கியமாக இருக்கிறது. ஆதார் கார்டில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்ட்

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்ட்

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆதார் கார்ட் விண்ணப்பிக்கும் எளிய முறையை யுஐடிஏஐ அறிவித்துள்ளது. சாதாரன ஆதார கார்ட்களைவிட ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்ட்கள் பெறுவது என்பது சில மாற்றம் இருக்கிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் பதிவு தேவையில்லை. அதற்கு பதிலாக பெற்றோர் புள்ளி விவர தகவல்கள் மற்றும் புகைப்படத்தின் தரவை வைத்து ஆதார் அட்டை அங்கீகாரம் வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்க தேவையான ஆவணங்கள்

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்க தேவையான ஆவணங்கள்

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெற்றவுடன் அவர்கள் ஐந்து வயது பூர்த்தி அடையும் போது பெயரின் கீழ் இருக்கும் விவரங்களில் பயோமெட்ரிக் தரவு இன்றி காட்டப்படும். அதை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஐந்து வயது பூர்த்தி செய்தவுடன் குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தரவு பூர்த்தி செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்க தேவையான ஆவணங்கள் குறித்து பார்க்கையில்., குழந்தை பிறப்பு சான்றிதழ், பெற்றோர்கள் ஒருவர் ஆதார் அட்டை மற்றும் இரண்டு ஆவணங்களின் அசல் தேவைப்படும். குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வாங்குவதற்கு கட்டாயமாக ஆதார் இசேவை மையத்தை அணுக வேண்டும். ஆனால் முன்பாக ஆன்லைனில் அப்பாயின்ட்மென்ட் பெறலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

யுஐடிஏஐ வலைதள அணுகல்

யுஐடிஏஐ வலைதள அணுகல்

யுஐடிஏஐ வலைதளத்தை அணுக வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களையும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். கெட் ஆதார் என்ற தேர்வில் அப்பாயின்மென்ட் என்பதை புக் செய்ய வேண்டும். இருக்கும் இடத்தை கிளிக் செய்து ப்ரொசீட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும், பின் நியூ ஆதார் (புது ஆதார்) என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து மொபைல் எண் பதிவு செய்து ஓடிபி உருவாக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்கள்

பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்கள்

அதில் தனிநபர் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் சந்திப்புக்கான நேரம் இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அனைத்தையும் சரி பார்த்து சப்மிட் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதில் குறிப்பிட்ட நாள் மற்றும் தேதிக்கு அந்த இடத்துக்கு சரியாக செல்ல வேண்டும். அங்கு குழந்தைக்கான ஆதார் அட்டைப்பதிவை முடித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் ஆதார் அட்டையில் DOB பிறந்த தேதி மாற்றுவது எப்படி

ஆன்லைன் ஆதார் அட்டையில் DOB பிறந்த தேதி மாற்றுவது எப்படி

உங்கள் ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்றம் செய்ய இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஸ்டெப் 1: சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலை பார்வையிட வேண்டும்

ஸ்டெப் 2: ஆதார் புதுப்பிப்பு தொடரவும் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3: உங்கள் 12 இலக்கு ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு கேப்சா குறியீட்டை சரிபார்க்க வேண்டும்.

ஸ்டெப் 4: அதில் ஓடிபி அனுப்பு என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்டெப் 5: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி குறியீட்டை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.

ஸ்டெப் 6: பிறந்த தேதி என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிறந்த தேதியை உங்கள் ஆதாரில் சரிசெய்து அதை புதுப்பிக்க வேண்டும். இதன்மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம். ஆதாரில் மொபைல் எண் உள்ளிட்ட புதுப்பிக்க ஆதார் மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

எத்தனை வயது குழந்தைகளுக்கு., எப்படி ஆதார் கார்ட் எடுப்பது?- இதோ எளிய வழிமுறைகள்! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password
   lida viagra fiyat cialis sipariş escort bayan