ஏப்ரல் 6, 2021
SaveSavedRemoved 0
உதடு வெடிப்புக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்
தற்போதைய காலநிலை மிகவும் மோசமாக மாறும் போது பலருக்கு உதடுகளில் வெடிப்புக்கள் மற்றும் கடுமையான வறட்சி ஏற்படும்.
உதட்டில் வெடிப்புக்கள் இருந்தால், எதையும் சாப்பிட முடியாது, குடிக்க முடியாது, ஏன் சிரிக்க கூட முடியாது.
உதட்டில் ஏற்படும் வெடிப்பு அவர்களின் அழகை பாதிக்கிறது. உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதற்கு காலநிலை மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் உள்ளன.
இதனை சரி செய்ய அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்கள் கூட எளியமுறையில் உதடு வெடிப்பை போக்க உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- கற்றாழை ஜெல்லை எடுத்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் குளிரவைக்க வேண்டும். பின்பு ஆன்டி பாக்டீரியல் கிளீன்சர் கொண்டு முகத்தை சுத்தப்படுத்திவிட்டு கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
- தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா எரிச்சலை குறைக்கும். சருமத்திற்கும் இதமளிக்கும். இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தயிரை தடவி விட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
- தேங்காய் எண்ணெய்யுடன் அதே அளவு பாதாம் எண்ணெய் கலந்து உதடு, வாய் மூலையில் வெடிப்பு ஏற்பட்டிருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரண்டு, மூன்று முறை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய்யுடன் இரண்டு துளி டீ ட்ரீ ஆயில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதனை காட்டன் பஞ்சுவில் முக்கி வெடிப்புள்ள பகுதியில் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் விரைவில் வெடிப்பு குணமாகிவிடும். சிலருடைய சருமத்திற்கு விளக்கெண்ணெய் ஒத்துக்கொள்ளாது. அப்படி ஒவ்வாமை பிரச்சிைனயை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை தவிர்த்துவிடலாம்.
…
உதடு வெடிப்புக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ் Source link
SaveSavedRemoved 0