உங்கள் சிபில் ஸ்கோரை ஆன்லைனில் ‘இலவசமாக’ செக் செய்வது எப்படி? எளிய வழியே இது தான்..

சிபில் எப்படிச் செயல்படுகிறது? எப்படி உங்களின் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது?
சிபில் என்பது கடன் தகவல் பணியகம் லிமிடெட் (இந்தியா) அலல்து சிபில் அறிக்கை அல்லது கடன் தகவல் அறிக்கை என்ற சிஐஆர் (CIR) மூலம் உங்களின் கடன் வரலாற்றுத் தேதியைப் பட்டியலிட்டு மதிப்பெண்ணை வழங்கும் ஒரு சேவையாகும். இதில் நீங்கள் எப்படி குறிப்பிட்ட காலப் பகுதியில் பல்வேறு வகையான கடன்கள் மற்றும் வரவுகளைத் திருப்பிச் செலுத்தியுள்ளீர்கள் என்பது போன்ற தகவல்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். முந்தைய கொடுப்பனவுகளை நீங்கள் எவ்வளவு சரியான நேரத்தில் திருப்பி செலுத்தியுள்ளீர்கள் என்பதை இது அடிப்படையாகக் கொண்டது. அதன் அடிப்படையிலேயே உங்களின் சிபில் ஸ்கோர் மாறுபடும்.

என்ன சிபில் ஸ்கோர் இருந்தால் கட்டாயம் லோன் கிடைக்கும்?
உங்கள் சிபில் மதிப்பெண் 300 முதல் 900 என்ற வரம்பைக் கொண்டுள்ளது. உங்களுடைய தரமான சிபில் மதிப்பெண் புதிய கடன் ஒப்புதல்களை எளிதில் பெற உங்களை அனுமதிக்கிறது. டிரான்ஸ்யூனியன் சிபில் வலைத்தளத்தின்படி, அனுமதிக்கப்பட்ட கடன்களில் 79 சதவிகிதம் மேற்பட்ட பயனர்களின் சிபில் ஸ்கோர் 750க்கும் அதிகமாக இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் சிபில் மதிப்பெண்ணைப் பல ஏஜென்சிகள் மூலம் நீங்கள் சரிபார்க்கலாம். இதைச் சிலர் இலவசமாகச் சோதனை செய்து உங்களுக்கு வழங்குவார்கள். இன்னும் சிலர் இதை கட்டணம் இல்லாமல் உங்களுக்கு வழங்குவதில்லை.
திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய ‘அந்த’ பொருள் அபேஸ்..

இலவசமாக சிபில் ஸ்கோர் செக் செய்ய என்ன செய்ய வேண்டும்?
ஆனால், பெரும்பாலானவர்கள் உங்களிடம் ஒருவித சந்தா கட்டணத்தை வசூலித்த பிறகே உங்களின் சிபில் மதிப்பினை உங்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். உங்கள் சிபில் மதிப்பெண்ணைச் சரிபார்க்கச் சிறந்த வழி அதிகாரப்பூர்வ வலைத்தளமான cibil.com வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நீங்கள் இலவசமாக உங்களின் சிபில் மதிப்பெண் அறிக்கையைப் பெற முடியும். நீங்கள் இதை இலவசமாக எவ்வாறு செய்யலாம் என்பதற்கான செயல்முறைகளை இப்போது பார்க்கலாம்.

சிபில் மதிப்பெண்ணை இலவசமாகச் சரிபார்க்க இதைச் செய்யுங்கள்
- உங்கள் சிபில் மதிப்பெண்ணை இலவசமாகச் சரிபார்க்க இந்த செயல்முறையைப் பின்பற்றுங்கள்
- முதலில் நீங்கள் உங்கள் சிபில் மதிப்பெண் அறிக்கையைத் தெரிந்துகொள்ள, அதிகாரப்பூர்வ தளமான Cibil.com வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
- ஹோம் பேஜில் உள்ள தனிப்பட்ட டேப் இன் கீழ் இருக்கும் Help Center ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது Free CIBIL Score and Report விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து, Get Your Free CIBIL Score and Report பட்டனை கிளிக் செய்க.
சரியான நேரத்தில் இந்தியாவுக்கு உதவும் கூகுள்.! ரூ.135 கோடி.! சுந்தர் பிச்சை முக்கிய தகவல்.!

அடையாள எண் பகுதியில் எந்த அடையாள எண்களை எண்டர் செய்வது?
- அடுத்த பக்கத்தில், மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும், பாஸ்வோர்டு, பெயர், தொலைப்பேசி எண் மற்றும் அடையாள எண் போன்றவற்றை உருவாக்கவும் கேட்கப்படுவீர்கள். இந்த அடையாள எண் உங்கள் பான், பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, டிரைவர் உரிமம் அல்லது ரேஷன் கார்டு எண்ணாக இருக்கலாம்.
- நீங்கள் அனைத்து தகவல்களையும் உள்ளிட்டதும், Accept and Continue என்பதைக் கிளிக் செய்க.
- அடுத்து, சந்தா திட்டத்தைத் தேர்வு செய்யுமாறு கேட்கப்படுவீர்கள், ஆனால் கீழே No Thanks என்பதைக் கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு முன்னேறலாம்.

Dashboard பட்டனை கிளிக் செய்க
- நீங்கள் தற்போது பயன்படுத்தும் சாதனத்தை இணைக்க விரும்புகிறீர்களா என்று அடுத்த பக்கம் உங்களிடம் கேட்கும், இது வலைத்தளத்தை எளிதான உள்நுழைவு அனுபவத்தை வழங்க அனுமதிக்கிறது. நீங்கள் இங்கே இருக்கும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து Continue என்பதைக் கிளிக் செய்யலாம் .
- “You have successfully enrolled” என்று ஒரு டிஸ்பிளே மெசேஜ்ஜை காண்பீர்கள்,Go To Dashboard பட்டனை கிளிக் செய்யுங்கள்.
‘மனித இனம் மிகவும் இழிவானது’ என்று கூறிய செக்ஸ் ரோபோட்.. இறுதியில் சொன்ன விஷயம் இருக்கே..ஐயையோ.!

சிபில் மதிப்பெண்
அடுத்த பக்கம் உங்கள் சிபில் மதிப்பெண்ணை டிஸ்பிளேவில் காண்பிக்கும்.
வருடத்திற்கு ஒரு முறைக்கு மேல் சிபில் மதிப்பெண்ணை நீங்கள் சரிபார்க்க வேண்டும் என்றால், நீங்கள் அந்த சேவைக்கு என்று தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். CRIF, Experian போன்ற பிற தளங்கள் வழியாகவும் உங்கள் சிபில் மதிப்பெண்ணை இலவசமாகச் சரிபார்க்கலாம்.

மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் மூலம் சிபில் செக் செய்வது பாதுகாப்பானதா?
ஆனால், இந்த நிறுவனங்களுக்கு இடையில் உங்கள் மதிப்பெண் வேறுபடலாம் என்பதை நினைவில் கொள்க. முன்னர் குறிப்பிட்டபடி, உங்கள் சிபில் மதிப்பெண்ணைக் காட்டக்கூடிய மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகள் எல்லாமாக பிளே ஸ்டோரில் இருக்கின்றது, ஆனால் அவற்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை மீது உறுதியான நம்பிக்கை இல்லாததினால் நீங்கள் எப்போதும் அதிகாரப்பூர்வ சிபில் வலைத்தளத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
உங்கள் சிபில் ஸ்கோரை ஆன்லைனில் ‘இலவசமாக’ செக் செய்வது எப்படி? எளிய வழியே இது தான்.. Source link