உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு உதவும் சிறந்த பாலிசிகள்.. !

உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு உதவும் சிறந்த பாலிசிகள்.. !

பொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே நம்முடைய பாதுகாப்பு கருதி நாம் முதலீடு செய்யும் ஒரு சிறந்த ஆப்சன் ஆகும். அதிலும் குழந்தைகளின் பாதுகாப்பு எனும்போது நாம் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

உங்கள் குழந்தைகளுக்கான நிதி பாதுக்காப்பினையும் ஊக்குவிக்கும் விதமாகவும், உங்கள் குழந்தைகளின் வருங்கால தேவைக்காகவும் பல இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. அவை உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை தரத்தினையும், அவர்களது வருங்காலத்தினை சிறப்பாக திட்டமிடுவதற்கும் வாய்ப்பாக அமைகிறது.

உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு உதவும் சிறந்த பாலிசிகள்.. !

நாங்கள் குழந்தைகளுக்காக இருக்கிறோமே? அப்புறம் எதற்காக இன்சூரன்ஸ் திட்டம் என்பது புரிகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கல்வி செலவினங்கள், மற்ற செலவினங்களை நம்முடைய இயல்பான சேமிப்புகளால் ஈடுகட்ட முடியாது. ஆக அந்த மாதிரியான சமயங்களில் உங்களுக்கு இந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் கைகொடுக்கலாம்.

சரி இதனால் என்ன பயன்? குழந்தைகளுக்கான ஆயுள் பாதுக்காப்பினை கொடுக்கிறது. அவர்களின் வருங்கால தேவையினை பூர்த்தி செய்ய பயன்படுகிறது. ஆக தங்களது குழந்தைகளின் வருங்காலத்தினை பாதுகாக்க நினைக்கும் எவருக்கும் இந்த பாலிசிகள் நல்லதொரு திட்டமாக இருக்கும். ஏனெனில் இது உங்களது குழந்தைகளின் எதிர்காலதிற்கு உறுதுணையாக அமையும். அதன் படி சில பாலிசிகளின் பெயரை கொடுத்துள்ளோம்.

குழந்தைகளுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களானது, முதலீடு மற்றும் சேமிப்பாகவே பார்க்கப்படுகிறது. இது அவசர காலங்களில் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையும். மேலும் இது உயர்கல்வி மற்றும் எதிர்கால செலவுகளை சமாளிப்பதற்காக உதவும்.

இதில் சில இன்சூரன்ஸ் திட்டங்கள் இதனை பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய குழந்தை வரை பெற்றுக் கொள்ள முடியும். சில பாலிசிகளை 12 – 24 வயதுடைய குழந்தைகளுக்கு பாலிசி எடுத்துக் கொள்ள முடியும். இதில் பெரும்பாலான திட்டங்கள் குழந்தைகளின் கல்வி திட்டத்திற்காக உள்ள ஒரு பாலிசிகளாக உள்ளன.

சில பாலிசிகள் இதோ

Max life shiksha plus plan

Metlife college plan

ICICI prudential smart kid premier plan

SBI life smart scholar plan

SBI life smart champ insurance plan

HDFC SL young star super premium

Bajaj Allianz young assurance plan

Bharati AXA child advantage plan

TATA AIA life insurance good kid plan

Kotak child assure plan

Aditiya birla sun life vision star plan

இப்படியாக மேற்கூரிய ஒவ்வொரு இன்சூரன்ஸ் திட்டமும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. ஆக அவற்றினை ஒப்பிட்டு பார்த்து, உங்களின் தேவைக்கு ஏற்றவாறு ஒரு திட்டத்தினை, உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு உதவும் சிறந்த பாலிசிகள்.. !

View Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password