உங்களுக்கு உயர் அழுத்தம் இருக்கா? இதனை முழுசா கட்டுப்படுத்த இந்த 10 மூலிகைகள் போதும்!

உங்களுக்கு உயர் அழுத்தம் இருக்கா? இதனை முழுசா கட்டுப்படுத்த இந்த 10 மூலிகைகள் போதும்!

உயர் இரத்த அழுத்தம் முதியவர்கள் மத்தியில் பொதுவாக காணப்படும் ஒரு பிரச்சினை ஆகும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். ஏனெனில் இது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

அந்தவகையில உயர் இரத்த அழுத்தத்தை குறைக்ககூடிய சில எளிய மருத்துவமுறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

 • பூண்டிற்கு நறுமணமும் பல மருத்துவ குணங்களும் காணப்படுகிறது. இதில் காணப்படும் மிக முக்கியமான பொருள் அல்லிசின் ஆகும். இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த நாளங்களை தளர்த்தவும் உதவுகிறது.
 • செலரி விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன, உயர் ரத்த அழுத்தம் உடன் தொடர்புடைய தலைச்சுற்றல், தலைவலி மற்றும் தோள்பட்டை வலி ஆகியவற்றைப் போக்க வினிகருடன் செலரி ஜூஸை உட்கொள்ளலாம்.
 • துளசியில் தாவர ஆக்ஸினேற்றியான யூஜெனோலில் நிறைந்துள்ளது. இது இயற்கையான கால்சியம் சேனல் தடுப்பானாக செயல்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
 • ​அஜ்வைனில் ரோஸ்மரினிக் அமிலம் என்ற சுவையான கலவை காணப்படுகிறது. இது வீக்கம், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்தல், இரத்த ஓட்டம் அதிகரித்தல் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இதய துடிப்பை குறைக்க உதவுகிறது.
 • இலவங்கப்பட்டை பண்டைய காலங்களிலிருந்து, இதயம் தொடர்பான பல்வேறு அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க இலவங்கப்பட்டை பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இது இரத்த நாளங்களை நிதானமாக வைக்க உதவுகிறது.
 • க்ரீன் ஓட்ஸில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இதில் ஆண்டிஹைபர்ட்டென்சிவ் மருந்துகள் காணப்படுகின்றன. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. லிப்பிட் மற்றும் குளுக்கோஸின் அளவை மேம்படுத்துவதோடு இருதய ஆபத்தையும் குறைக்கின்றன.
 • ஆளிவிதை கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் பெருந்தமனி தடிப்பு இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடும். ஆளி விதைகளை தினமும் 15 முதல் 50 கிராம் வரை உட்கொள்வது மொத்த கொழுப்பைக் குறைக்கும்.
 • இஞ்சி இதய ஆரோக்கியத்தின் பல அம்சங்களை மேம்படுத்த உதவுகிறது. கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இரத்த நாளங்களை தளர்த்தவும் இயற்கையான சேனல் தடுப்பானாக இஞ்சி செயல்படுகிறது. எனவே உங்க அன்றாட பானங்களில் நீங்கள் இஞ்சியை சேர்த்து வரலாம்.
 • ஏலக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து காணப்படுகிறது. இயற்கையான கால்சியம் சேனல் தடுப்பானாக செயல்படுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இது சிறுநீர் ஓட்டத்தை அதிகரிக்கிறது.
 • ​ பார்சிலி இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பல்வேறு சேர்மங்களைக் கொண்டுள்ளது.

உங்களுக்கு உயர் அழுத்தம் இருக்கா? இதனை முழுசா கட்டுப்படுத்த இந்த 10 மூலிகைகள் போதும்! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart