உங்களது சர்வதேச ஓட்டுனர் உரிமம் காலாவதியாகிவிட்டதா? வெளிநாட்ல இருந்தே புதுப்பிக்க வாய்ப்பு

உங்களது சர்வதேச ஓட்டுனர் உரிமம் காலாவதியாகிவிட்டதா? வெளிநாட்ல இருந்தே புதுப்பிக்க வாய்ப்பு

கொரோனா பிரச்னையால் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பெரும் பாதிப்பு இருந்து வருகிறது. மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாடு திரும்புவதில் பல பிரச்னைகள் உள்ளன. இதனை கருத்தில்கொண்டு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு புதிய சலுகை ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியரா... உங்கள் சர்வதேச ஓட்டுனர் உரிமம் காலாவதியாகிவிட்டதா? கவலைய விடுங்க!

அதில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பயன்படுத்தும் சர்வதேச ஓட்டுனர் உரிம அனுமதி சீட்டு காலாவதியானால், அங்கிருந்தபடியே புதுப்பிக்கும் வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியரா... உங்கள் சர்வதேச ஓட்டுனர் உரிமம் காலாவதியாகிவிட்டதா? கவலைய விடுங்க!

சம்பந்தப்பட்ட நாட்டில் செயல்படும் இந்திய தூதரகம் மூலமாக தங்களது சர்வதேச ஓட்டுனர் உரிம அனுமதி சீட்டை புதுப்பிப்பதற்கு வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி, தூதரகம் வழியாக வாகன் இணையதளம் மூலமாக, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியரா... உங்கள் சர்வதேச ஓட்டுனர் உரிமம் காலாவதியாகிவிட்டதா? கவலைய விடுங்க!

அங்கு சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான நடைமுறைகள் சரிபார்க்கப்பட்டு பின்னர் அனுமதி நீட்டித்து தரப்படும். மேலும், புதிய சர்வதேச ஓட்டுனர் உரிம அனுமதி சீட்டு, சம்பந்தப்பட்டவருக்கு தபால் மூலமாக வெளிநாட்டில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியரா... உங்கள் சர்வதேச ஓட்டுனர் உரிமம் காலாவதியாகிவிட்டதா? கவலைய விடுங்க!

இந்த நடைமுறையில் இரண்டு கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிப்பவருக்கு விசா மற்றும் மருத்துவச் சான்று ஆகிய இரண்டும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியரா... உங்கள் சர்வதேச ஓட்டுனர் உரிமம் காலாவதியாகிவிட்டதா? கவலைய விடுங்க!

இதனால், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எளிதாக தங்களது காலாவதியான அல்லது காலாவதியாகும் காலத்தில் உள்ள சர்வதேச ஓட்டுனர் உரிம அனுமதி சீட்டை புதுப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியரா... உங்கள் சர்வதேச ஓட்டுனர் உரிமம் காலாவதியாகிவிட்டதா? கவலைய விடுங்க!

ஓட்டுனர் உரிமத்திற்கு ஒரு மருத்துவச் சான்று இருக்கும்போது, சர்வதேச ஓட்டுனர் உரிமத்திற்கு தனியாக ஒரு மருத்துவ சான்று தேவையில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதேபோன்று, சில நாடுகள் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்கும் நடைமுறையை பின்பற்றுவதால், இதில் உள்ள சிக்கல்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளது.

நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியரா... உங்கள் சர்வதேச ஓட்டுனர் உரிமம் காலாவதியாகிவிட்டதா? கவலைய விடுங்க!

இந்த முடிவு நிச்சயமாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். ஏற்கனவே, காலாவதியான சர்வதேச ஓட்டுனர் உரிம அனுமதி சீட்டை வெளிநாட்டில் இருந்தபடியே பெற முடியாத நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.உங்களது சர்வதேச ஓட்டுனர் உரிமம் காலாவதியாகிவிட்டதா? வெளிநாட்ல இருந்தே புதுப்பிக்க வாய்ப்பு Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this: