உங்களது ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பாக ஒரு இன்சூரன்ஸ் திட்டம்..!

உங்களது ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பாக ஒரு இன்சூரன்ஸ் திட்டம்..!

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இன்சூரன்ஸின் அவசியத்தினை நம்மில் பலர் அறிந்திருக்கலாம்.

எங்கே எப்போது யார் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது? என்பதனை கூட அறியமுடியாமல் இங்கு பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

உங்களது ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பாக ஒரு இன்சூரன்ஸ் திட்டம்..!

இதற்கு மத்தியில் இவர்களுக்கு உதவும் வகையில் பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் ஒரு அதிரடியான திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளில், சிக்கலான பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம் உடல் நலம் மற்றும் ஆயுள் பாதுகாப்பு திட்டம் என, ஒரு விரிவான சுகாதாரம் மற்றும் சிக்கலான நோய் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது முன்னோடியில்லாத சூழல் மற்றும் கொரோனா வைரஸினால் எழும் அச்சத்தினை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் உயிர் பாதுகாப்பு வழங்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது மருத்துவமனைகளில் தேவைகளை நிவர்த்தி செய்யவும், சிக்கலான நோய்களுக்கு தீர்வு வழங்கும் வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பராக் ராஜா கூறியுள்ளார்.

இந்த திட்டமானது இந்த பாலிசியினை 18 வயது முதல் 65 வயது வரையிலான நபர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டம் மூலம் அதிகபட்சமாக 75 வயது வரை பாதுகாப்பினை வழங்குகிறது. மேலும் இது வசதியான இரு பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இரு உறுதிப்படுத்தப்பட்ட விருப்பங்களை வழங்குகிறது. ஒன்று 15 லட்சம் வரையிலும் மற்றொன்று 20 லட்சம் வரையிலும் வழங்குகிறது. அதோடு பிரிமீயத்தினை உங்களுக்கு ஏற்றவாறு 5,10,15, 20 வருடங்களாக பிரித்தும் கட்டலாம்.

அதோடு இந்த பாலிசியானது 34 மோசமான சிக்கல்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் தனது இந்திய வலையமைப்பில், 261 கிளைகளையும், 40,000க்கும் மேற்பட்ட ஆலோசகர்களையும் கொண்டுள்ளது.

ஆக இந்த அதிரடியான திட்டமானது இந்த கொரோனா காலத்தில் மிக பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனா மட்டும் அல்ல, இன்னும் சில பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

உங்களது ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பாக ஒரு இன்சூரன்ஸ் திட்டம்..!

View Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password