இரண்டு வாரங்கள் ஊரடங்கு… கரோனா தொற்று அதிகரிப்பால் மலேசியா நடவடிக்கை! | two weeks lockdown imposed malaysia
இரண்டு வாரங்கள் ஊரடங்கு… கரோனா தொற்று அதிகரிப்பால் மலேசியா நடவடிக்கை! | two weeks lockdown imposed malaysia
2021-01-15 17:30:37
கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும், உலக நாடுகளில் கரோனா தற்போது வேகமெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மலேசியா நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதால், இரண்டு வாரங்கள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கின் போது விவசாயம், உற்பத்தி போன்ற சில துறைகள் மட்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கை அறிவித்த மலேசியப் பிரதமர், நிலைமை எச்சரிக்கத்தக்க வகையில் இருப்பதாகவும், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அழுத்தத்தை தற்போது மலேசிய சுகாதார கட்டமைப்பு சந்தித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
இரண்டு வாரங்கள் ஊரடங்கு… கரோனா தொற்று அதிகரிப்பால் மலேசியா நடவடிக்கை! | two weeks lockdown imposed malaysia
Source link