- 1

இரண்டு முட்டாள் ஆடுகள்

108 0

சிறுவர் நீதி கதைகள்

இரண்டு முட்டாள் ஆடுகள்

இரண்டு முட்டாள் ஆடுகள் – (Two Silly Goats Moral Story in Tamil)

 அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன.

அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.

முதலாவது ஆடு “எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்” என்றது. உடனே, இரண்டாவது ஆடு “நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்” என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.

ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.

நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.

சிறுவர் நீதி கதைகள்

இரண்டு முட்டாள் ஆடுகள்

Related Post

64. உலகம் போச்சு

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 64. உலகம் போச்சு வெள்ளம் ஆற்றில் கரைபுரண்டு ஒடும்போது, அதில் அடித்துச் செல்லப்பட்ட நரி ஒன்று, “ஐயோ உலகம் போச்சு, உலகம் போச்சு’ என்று…

87. கரையேறுதல்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 87. கரையேறுதல் ஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில், முள்ளிலே புழுவை மாட்டிக்…

சாட்சி சொன்ன மரம் 1-14

Posted by - ஏப்ரல் 17, 2020 0
சாட்சி சொன்ன மரம் 14 சாட்சி சொன்ன மரம் ஒரு பட்டணத்தில் இரண்டு வணிகப் பிள்ளைகள் இருந்தார்கள். ஒருவன் பெயர் நல்ல புத்தி. இன்னொருவன் பெயர் கெட்டபுத்தி.…

புலியால் மாய்ந்த பார்ப்பனன் 2-2

Posted by - ஏப்ரல் 17, 2020 0
புலியால் மாய்ந்த பார்ப்பனன் 2. புலியால் மாய்ந்த பார்ப்பனன் ஒரு காட்டில் ஒரு கிழட்டுப் புலி இருந்தது. அது போதுமான பலம் இல்லாததால் உணவு தேட முடிய…

56. மூத்த மாப்பிள்ளை

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 56. மூத்த மாப்பிள்ளை ஒருசமயம் நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் தன் அருகில் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “இவர்தான்…

உங்கள் கருத்தை இடுக...