இயற்கை பேரழிவு போன்றவற்றில் இருந்து வீடுகளை காப்பாற்றும் காப்பீடு திட்டங்கள்!

இயற்கை பேரழிவு போன்றவற்றில் இருந்து வீடுகளை காப்பாற்றும் காப்பீடு திட்டங்கள்!

விலைபோகாத காப்பீடுகள்

விலைபோகாத காப்பீடுகள்

இந்தியாவில் வீடுகளுக்கான காப்பீடு மிகவும் குறைவாகவே இருப்பதாக எஸ்.பி.ஐ. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி புனீத் சஹானி கூறுகிறார். வீடுகளை வாங்குவது அதிகரித்திருந்தாலும், காப்பீடுகள் விலைபோகவில்லை என்கிறார். வீடுகளுக்கான காப்பீடு ஒரு விழுக்காடு கூட இல்லை எனப் பஜாஜ் அல்லயன்ஸ் அதிகாரி சசிகுமார் தெரிவித்தார்.

பயன்பாட்டுக் காரணிகள்

பயன்பாட்டுக் காரணிகள்

வீடுகளுக்கான காப்பீடு இரண்டு வகைகளில் கிடைக்கிறது.கட்டடம், கட்டமைப்பின் பாதுகாப்பு, கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான பாதுகாப்பு, வாடிக்கையாளர்களின் விருப்பத்தேர்வு, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்குக் காப்பீடுகள் பயன்படுகின்றன.

இழப்புகளை ஈடு செய்யும்

இழப்புகளை ஈடு செய்யும்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம்போல ஒரு பேரழிவு ஏற்பட்டால், வீட்டின் கட்டமைப்பைப் மட்டுமல்லாமல், இழப்பு மற்றும் சேதங்களையும் காப்பீடு ஈடு செய்கிறது. சிறிய உபகரணங்கள், நகைகள்,கலைப் பொருட்கள் மற்றும் ஓவியங்களில் ஏற்படும் சேதங்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்குகிறது.

சேதங்களுக்கு இழப்பீடு

சேதங்களுக்கு இழப்பீடு

மின்னல், நெருப்பு, எரிமலை , புயல்கள் ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. பாறைச்சரிவு மற்றும் நிலச்சரிவுகளில் ஏற்படும் இழப்புகளையும் ஈடு செய்கிறது. மேலும் காப்பீடுகள், வேலைநிறுத்தங்கள், வன்முறைகள் தீங்கிழைக்கும் நோக்கங்களால் ஏற்படுத்தப்பட்ட சேதம், சமூக விரோத செயல்களால் உண்டாக்கப்படும் இழப்புகளுக்கும் தகுந்த இழப்பீட்டை உறுதி செய்கிறது.

பூகம்பத்துக்குக் கூடுதல் பிரீமியம்

பூகம்பத்துக்குக் கூடுதல் பிரீமியம்

வீடு மற்றும் பிற சொத்துக்களுக்கும் காப்பீட்டுத் திட்டம் இழப்பீட்டை வழங்குகிறது. கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் பயங்கரவாதம் பூகம்பம் போன்ற ஆபத்துகளில் இருந்து வீடுகளின் இழப்புகளை ஈடு செய்து கொள்ள முடியும்.

பொருந்தாத காரணிகள்

பொருந்தாத காரணிகள்

கட்டுமானக் குறைபாடுகள், மோசமான பராமரிப்பில் உள்ள வீடுகள், உள்ளார்ந்த சேதங்கள் ஆகியவற்றுக்குக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது.

வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட சேதங்கள், பராமரிக்கப்படாத வீடுகள், இயற்கை வெப்பம், தன்னிச்சையாகத் தீப்பிடித்து எரிதல், போர் மற்றும் அணுசக்தி ஆபத்துகளுக்கும் அதன் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கும் காப்பீடுகள் மூலம் இழப்பீட்டைப் பெற முடியாது. தீவிபத்து, திருட்டு, மாசுபாடு, கடல் அரிப்பு, ஒழுகும் சேதங்களுக்கும் இழப்பீட்டை காப்பீட்டுத் திட்டம் ஏற்காது.

காப்பீடு- இதர நன்மைகள்

காப்பீடு- இதர நன்மைகள்

வெள்ளப்பாதிப்பின்போது வீடுகளில் வசிக்க முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், கூடுதல் வாடகையுடனான தங்கும் விடுதிக்கு 12 மாதங்கள் வரை காப்பீட்டுத் திட்டங்கள் பலனளிக்கிறது. தற்காலிக குடியிருப்புகளில் தங்குவதற்கான செலவையும் ஏற்கிறது. இதுதவிர அவசரக்காலக் கொள்முதல் ,மாற்று விடுதிகள் மற்றும் போக்குவரத்து செலவுகளையும் காப்பீடுகள் ஏற்றுக் கொள்கின்றன.

உபகரணங்களுக்குக் காப்பீடு

உபகரணங்களுக்குக் காப்பீடு

நகைகள், கண்ணாடிகள், நியான் பலகைகள், பளபளப்பான பொருட்கள், கணினிகள், தொலைக்காட்சி மற்றும் ஒலி, ஒளி உபகரணங்களில் ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடுகள் இழப்பீடு அளிக்கிறது. உள்நாட்டு உபகரணங்கள், தனிப்பட்ட விபத்து , பணிமனை இழப்பீடு, பொதுப் பொறுப்பு மற்றும் மின்சார இயந்திர கோளாறுகளுக்குக் காப்பீடுகள் மூலம் நன்மைகளைப் பெறலாம்.

வீட்டு காப்பீடு - நிபந்தனைகள்

வீட்டு காப்பீடு – நிபந்தனைகள்

காப்பீட்டுக்கான பிரீமியங்கள் தீர்மானிக்கப்பட்டதாக இருந்தாலும், வாடிக்கையாளரின் விருப்பத்தைப் பொறுத்தது. மறு மதிப்பீடு, தேர்வு செய்யப்பட்ட மதிப்பீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.சொத்துக்களின் அமைவிடம், பாதுகாப்பு ஆகியவை பிரீமியத்தைப் பாதிக்காது.

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

கட்டமைப்புக்குக் காப்பீடு செய்யப்பட்ட தொகை புனரமைப்பு செலவினத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படும். உள்ளடக்கங்களுக்கான காப்பீட்டுத் தொகை, சந்தை மதிப்பீட்டு அடிப்படையிலானது. உரிமை கோரும்போது தேய்மானம் கணக்கில் எடுக்கப்படும்.

கூடுதல் பிரீமியம்

கூடுதல் பிரீமியம்

10 லட்சம் ரூபாய் காப்பீட்டிற்கான பிரீமியம் ரூபாயாக 400 ஆக இருக்கும். பொதுவாக, தீ மற்றும் அது தொடர்புடைய ஆபத்துக்களுக்குச் சமமான பிரீமியத்தைக் கொண்டிருக்கும். அதேநேரம் அபாயகரமான பாதுகாப்புக்காகப் பிரீமியம் அதிகமாகச் செலுத்த வேண்டி வரும்.

அபாயம்

அபாயம்

இயற்கைப் பேரழிவுகளுக்குச் சாத்தியமுள்ள பகுதிகளில் உள்ள சொத்துகளுக்குப் பிரீமியம் கூடுதலாக இருக்கும்.இது போன்ற பகுதிகளில் இழப்பும், சேதமும் தீவிரமானதாக இருக்க வாய்ப்புள்ளது.

இயற்கை பேரழிவு போன்றவற்றில் இருந்து வீடுகளை காப்பாற்றும் காப்பீடு திட்டங்கள்!

VIew Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password