- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC Section 498A in Tamil)

3412 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC Section 498A in Tamil)

விளக்கம்

ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.
விளக்கம்:
இந்தப்பிரிவில் வரும் கொடுமைப்படுத்துதல் என்ற சொல் தரக்கூடிய பொருள் யாதெனில்;
1. ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டக்கூடிய அல்லது அவளுடைய உயிருக்கு, உடலுக்கு அல்லது சுகத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலைக் குறிக்கும் (அது உடலுக்கு அல்லது உள்ளத்துக்கு கேடுபயக்கக் கூடியதாகக் கூட இருக்கலாம்)
2. சட்ட விரோதமாக ஒரு சொத்தை அல்லது மதிப்புள்ள காப்பீட்டை அந்தப் பெண் மூலம் அல்லது அவளுடைய உறவினரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெற வேண்டும் என்பதற்காக அல்லது அப்படி அவளால் அல்லது அவளுடைய உறவினரால் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அந்தப் பெண்ணுக்குப் பொறுக்க முடியாத சங்கடங்களை உண்டாக்குவதைக் குறிக்கும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 366A (IPC Section 366A in Tamil)

Posted by - நவம்பர் 13, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 366A (IPC Section 366A in Tamil) விளக்கம் பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணை, பிறருடன் கட்டப்புணர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 121A (IPC Section 121A in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 121A (IPC Section 121A in Tamil) விளக்கம் இந்தியாவிற்கு உள்ளே அல்லது வெளியே உள்ள எவரேனும், சட்டப்பிரிவு 121ஆல் தண்டிக்கப்படக்கூடிய…

உங்கள் கருத்தை இடுக...