இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை… மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்…

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை… மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்…

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை... மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்...

புதிய கார் வாங்கும்போது இந்தியர்கள் கவனிக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மைலேஜ் உள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு, வசதிகள், டிசைன் மற்றும் விலை ஆகிய அம்சங்களை போல், மைலேஜிற்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை... மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்...

எனவே எரிபொருள் சிக்கனத்தில் தலை சிறந்து விளங்கும் டாப்-5 எம்பிவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு எம்பிவி கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தேர்வுகள் உள்ளதால், சிறந்ததை தேர்ந்து எடுக்க இந்த செய்தி உதவியாக இருக்கலாம்.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை... மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்...

மஹிந்திரா மராஸ்ஸோ

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 123 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் ஒரு லிட்டருக்கு 17.31 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை... மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்...

ரெனால்ட் ட்ரைபர்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் நிறுவன கார்களில் ஒன்றான ட்ரைபர் எம்பிவியில், 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் மாடலில், ரெனால்ட் ட்ரைபர் ஒரு லிட்டருக்கு 19 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க வல்லது.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை... மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்...

மாருதி சுஸுகி எர்டிகா

இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எம்பிவி கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எர்டிகா உள்ளது. தற்போதைய நிலையில் 7.81-10.59 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் மாருதி சுஸுகி எர்டிகா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை... மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.01 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை... மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்...

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6

மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவியின் அதிக பிரீமியம் நிறைந்த மாடல்தான் எக்ஸ்எல்6. நெக்ஸா டீலர்ஷிப்கள் வாயிலாக எக்ஸ்எல்6 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எர்டிகா எம்பிவியில் உள்ள அதே 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வுதான் எக்ஸ்எல்6 காரிலும் வழங்கப்படுகிறது. மேனுவல் மாடலில் இந்த காரும் ஒரு லிட்டருக்கு 19.01 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை... மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்...

டட்சன் கோ ப்ளஸ்

இந்திய சந்தையில் கிடைக்கும் மிக விலை குறைவான எம்பிவி கார் இதுதான். தற்போதைய நிலையில் 4.25-6.99 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் டட்சன் கோ ப்ளஸ் விற்பனையாகி வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை... மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்...

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அத்துடன் ஒரு லிட்டருக்கு 19.02 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும். டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரில், ஆப்ஷனல் சிவிடி தேர்வும் வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலைக்கு இவைதான் ஏற்றவை… மைலேஜை வாரி வழங்கும் எம்பிவி கார்கள்… Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password