ஆதார் கார்டில் பிறந்த தேதியை எப்படி திருத்துவது: இதோ எளிய வழிமுறைகள்!
|
ஆதார் கார்டு என்பது பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக்கப்பட்டு வருகிறது. வங்கி சேவைகளில் தொடங்கி பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமாக இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா நடவடிக்கையில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

வங்கிகள் கணக்குகளில் தொடங்கி சிம் கார்டு வாங்குவதன் மூலம் பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் கார்டு பிரதானமாக இருந்து வருகிறது. சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட ஆதார் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி இன்றுதான். மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இணைக்கப்படாத நபர்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உட்பட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைக்கப்படாதவர்கள் பான் அட்டை இல்லாதவர்களாகவே கருதப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 272பி கீழ் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆதார் கார்டு அத்தியாவசியமான ஆவணங்களாக மாற்றப்பட்டு வருகிறது. வங்கி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என அனைத்துக்கும் ஆதார் கார்டு முக்கியமாக இருக்கிறது. ஆதார் கார்டில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
இதில் ஆதார் கார்டில் பிறந்த தேதி தவறாக இருக்கும்பட்சத்தில் அதை எப்படி மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். ஆதார் கார்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை தாமாகவே ஆன்லைனில் சரி செய்து கொள்ளலாம். அதற்கான புதுப்பிப்பு போர்டல் வழியாக திருத்தப்படக் கூடிய அம்சங்களை பார்க்கலாம். ஆதார் கார்டில் ஆன்லைனில் உங்கள் பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட பிற விவரங்களை புதுப்பிக்கலாம்.

அதேபோல் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க விரும்பினால் அதற்கான துணை ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தை நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம். அதேபோல் ஒருவர் உங்கள் ஆதார் அட்டையில் இரண்டு முறை மட்டுமே பெயரை புதுப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எழுத்துப்பிழை திருத்தங்கள், திருமணத்திற்கு பிறகு பெயர் மாற்றம் உள்ளிட்ட மாற்றங்களுக்கு இது உட்பட்டது. அதேபோல் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை புதுப்பிக்க வரம்பு இல்லை.

ஆன்லைன் ஆதார் அட்டையில் DOB பிறந்த தேதி மாற்றுவது எப்படி
உங்கள் ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்றம் செய்ய இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஸ்டெப் 1: சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலை பார்வையிட வேண்டும்
ஸ்டெப் 2: ஆதார் புதுப்பிப்பு தொடரவும் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: உங்கள் 12 இலக்கு ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு கேப்சா குறியீட்டை சரிபார்க்க வேண்டும்.
ஸ்டெப் 4: அதில் ஓடிபி அனுப்பு என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 5: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி குறியீட்டை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.
ஸ்டெப் 6: பிறந்த தேதி என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிறந்த தேதியை உங்கள் ஆதாரில் சரிசெய்து அதை புதுப்பிக்க வேண்டும். இதன்மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம். ஆதாரில் மொபைல் எண் உள்ளிட்ட புதுப்பிக்க ஆதார் மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
Best Mobiles in India
54,535
1,19,900
54,999
86,999
49,975
49,990
20,999
1,04,999
44,999
64,999
20,699
49,999
11,499
54,999
7,999
8,980
17,091
10,999
34,999
39,600
25,750
33,590
27,760
44,425
13,780
1,25,000
45,990
1,35,000
82,999
17,999
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
ஆதார் கார்டில் பிறந்த தேதியை எப்படி திருத்துவது: இதோ எளிய வழிமுறைகள்! Source link
Tags: How to Tech