ஆகஸ்ட் 2020-ல் இருந்து கார், பைக்களின் ஆன் ரோட் விலை குறையலாம்! எப்படி?

ஆகஸ்ட் 2020-ல் இருந்து கார், பைக்களின் ஆன் ரோட் விலை குறையலாம்! எப்படி?

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

அதை கார் அண்ட் பைக் (Car and bike) கம்பெனி தரப்பில் இருந்து விளக்குகிறார்கள். இந்தியாவின் இன்சூரன்ஸ் துறையை நிர்வகிக்கும் ஐ ஆர் டி ஏ என்கிற அமைப்பு, நீண்ட கால இன்சூரன்ஸ் பேக்கேஜ் திட்டத்தை 01 ஆகஸ்ட் 2020 முதல் பின் வாங்க இருக்கிறதாம். எனவே கார் & இரு சக்கர வாகனங்களின் விலை கொஞ்சம் குறையும் என்கிறார்கள்.

எந்த இன்சூரன்ஸ்

எந்த இன்சூரன்ஸ்

இரு சக்கர வாகனங்கள் & கார்களுக்கு own-damage policy இன்சூரன்ஸ் & third-party இன்சூரன்ஸ் என இரண்டு இருக்கின்றன. புதிய வாகனங்களை வாங்கும் போது, கார் என்றால் மேலே சொன்ன இன்சூரன்ஸை 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனம் என்றால் 5 ஆண்டுகளுக்கும் எடுக்க வேண்டும். இது தற்போது கட்டாயமாக இருக்கிறது.

ஒரு வருடம் போதும்

ஒரு வருடம் போதும்

இனி, 01 ஆகஸ்ட் 2020 முதல், own-damage policy-ஐ 3 ஆண்டுகளுக்கோ அல்லது 5 ஆண்டுகளுக்கோ வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு வருடத்துக்கு own-damage policy எடுத்தால் போதுமாம். சொல்லப் போனால், இனி வாகனங்களை வாங்குபவர்கள், own-damage policy-ஐ ஒரு ஆண்டுக்கு மேல் வாங்க நினைத்தாலும் வாங்க முடியாதாம்.

வழக்கம் போலத் தொடரும்

வழக்கம் போலத் தொடரும்

ஆனால், third-party இன்சூரன்ஸ் வழக்கம் போல கார் என்றால் 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்கள் என்றால் 5 ஆண்டுகளுக்கும் எடுக்க வேண்டும். கடந்த செப்டம்பர் 2018-ல் தான் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, நீண்ட கால இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கார்களுக்கு 3 ஆண்டுகளும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளும் (own-damage policy + third-party) இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமாக இருந்து வருகிறது. இப்படி இன்சூரனஸ் கட்டாயமானதால், ஆட்டோமொபைல் விற்பனையிலும் இது எதிரொலித்தது.

தனி பாலிசி

தனி பாலிசி

கடந்த 01 செப்டம்பர் 2019 முதல், own-damage policy இன்சூரன்ஸை தனியாகக் கொடுக்கச் சொன்னது ஐ ஆர் டி ஏ ஐ. ஆகஸ்ட் 2020 முதல் own-damage policy-ஐ ஒரு வருடமாக குறைத்து இருக்கிறார்கள். own-damage policy உடன் ஒப்பிடும் போது third-party இன்சூரன்ஸ் பாலிசிக்கான விலை குறைவு தானாம். எனவே 01 ஆகஸ்ட் 2020 முதல் ஆட்டோமொபைல்களின் விலை கொஞ்சம் குறையும் என்கிறார்கள்.

ஆகஸ்ட் 2020-ல் இருந்து கார், பைக்களின் ஆன் ரோட் விலை குறையலாம்! எப்படி?

View Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password