அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

அருகம்புல் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட புல்வகையைச் சார்ந்த சிறுசெடியாகும்.

அருகு, பதம், தூர்வை, மேகாரி ஆகிய தமிழ்ப் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு.

இது பல நோய்களை தீர்க்க கூடியதாக உள்ளது. பல மருத்துவ குணங்கள் இதில் அடங்கியுள்ளது.

அந்தவகையில் தற்போது இதன் மருத்துகுணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

 • அருகம்புல் வாதம், பித்தம், கபம் போன்ற நோய்களை குணப்படுத்தி உடலுக்கு ஊட்டத்தை வழங்கும். சிறுநீரை பெருக்கவும், இரத்த போக்கை தடுக்கவும், மருந்துகளின் நச்சி தன்மைகளை குறைக்கவும் அருகம்புல் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
 • தேள், பாம்பு, பூரான் போன்ற விஷச்சந்துகள் கடித்தால் உடனே அருகம் புல்லை அரைத்து ஒரு டம்ளர் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதினால் விஷம் பரவுவது தாமதப்படுத்தும் இந்த அருகம்புல்.
 • அருகம் புல்லை ஒரு கையளவு எடுத்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, புண், படர்தாமரை, அரிப்பு உள்ள இடத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு தினமும் செய்து வர பிரச்சனை சரியாகும்.
 • அருகம்புல்லுடன் மஞ்சள், கிச்சிலிக்கிழங்கு, வெட்டி வேர் ஆகியவற்றை சமமாக எடுத்து இடித்து, நீர்விட்டு மைபோல் அரைத்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு பிரச்சனை சரியாகும்.
 • அருகம்புல்லை ஒரு கையளவு எடுத்து அரைத்து, 200 மில்லி காய்ச்சாத ஆட்டுப்பாலுடன் கலந்து, காலை வேளையில் மட்டும் இரண்டு வாரம் தொடர்ந்து குடித்து வர மூலம், இரத்த மூலம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
 • அருகம்புல் ஆபத்துக்கு உதவும் என்பது பழமொழி. அதாவது திடீரென்று காயம்பட்டு இரத்த பெருக்கு ஏற்பட்டாலும், மூக்கில் இரத்தம் கொட்டினாலும் அருகம் புல்லை அரைத்து பயன்படுத்தலாம்.
 • பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, அதிகப்படியான இரத்த போக்கு போன்ற பிரச்சனைகள் குணமாக, இந்த அருகம் புல்லை அரைத்து காய்ச்சாத பசும் பாலில் கலந்து ஒரு டம்ளர் அருந்தலாம்.
 • அருகம்புல்லை சிறிதளவு எடுத்து தட்டி, துணியில் வைத்து கண்களில் இரண்டு சொட்டுகள் பிழிய கண் எரிச்சல், கண் வலி, கண் சிவப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
 • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கையளவு அருகம் புல்லை எடுத்து நன்றாக அரைத்து, அதனுடன் காய்ச்சாத பசும் பால் கலந்து குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரையும். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
 • சில பெண்களுக்கு உடல் சூட்டினால் அதிகமாக வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படும். அப்படி பட்டவர்கள் அருகம்புல்லை ஒரு கையளவு எடுத்து நன்றாக அரைத்து, 1 டம்ளர் பசும் தயிரில் கலந்து தொடர்ந்து 10 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுத்தல் பிரச்சனை குணமாகும்.

அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart