அம்மா இங்கே வா! வா! – குழந்தை பாட்டு

635 0

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.

குழந்தை பாடல்கள் – தமிழ் DNA

அம்மா இங்கே வா! வா!

Related Post

எவரையும் ஏளனம் நீ செய்யாதே – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
மனிதர் வெறுக்கும் சேற்றிலேமலர்ந்து நிற்கும் தாமரை;புனிதமான கடவுளைபூசை செய்ய உதவுதே! அழுக்கடைந்த சிப்பியில்அழகு முத்தைக் காணலாம்;கழுத்தில் நல்ல மாலையாய்கட்டி மகிழ உதவுதே! கன்னங்கரிய குயிலிடம்காது குளிரும் கீதமோ;இன்பம்…

பொம்மை பார் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
பொம்மை பொம்மை பொம்மை பார்புதிய புதிய பொம்மை பார் தலையை ஆட்டும் பொம்மை பார்தாளம் போடும் பொம்மை பார் கையை வீசும் பொம்மை பார்கண்ணை சிமிட்டும் பொம்மை…

ஆராரோ அரிரரோ-1

Posted by - ஏப்ரல் 16, 2020 0
ஆராரோ அரிரரோ அரிரரோ அராரோ அரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு கண்ணே யடிச்சரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம் அடிச்சாரைச் சொல்லியழு…

மரம் வளர்ப்போம்! – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
தாத்தா வைத்த தென்னையுமே,தலையால் இளநீர் தருகிறது! பாட்டி வைத்த கொய்யாவும்,பழங்கள் நிறைய கொடுக்கிறது! அப்பா வைத்த மாஞ்செடியும்,அல்வா போல பழம் தருது! அம்மா வைத்த முருங்கையுமேஅளவில்லாமல் காய்க்கிறது!…

தொடர் வண்டி – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020 0
நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட தூரம் போகும் வண்டி தண்டவாளத்தில் அது போகும் தட தட வென்று விரைந்தோடும் ‘கூ’….…

உங்கள் கருத்தை இடுக...