- 1

அனைவருக்கும் பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்..! இதோ சில எளிய குறிப்புக்கள்

73 0

அனைவருக்கும் பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்..! இதோ சில எளிய குறிப்புக்கள்

நாம் நோயின்றி வாழ்வதற்கு தேவையான 10 பயனுள்ள மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.

 • துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தொண்டை பிரச்சனைகள் குணமாகும்.
 • தினமும் சாப்பிட்ட பின் தண்ணீருடன் கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இவ்வாறு குடிக்கும் போது வயிற்றில் உள்ள அமிலங்கள் சுரப்பதை குறைக்க வழிவகுக்கும்.
 • கால் தேக்கரண்டி கரு மிளகு தூள், மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இவை அனைத்தையும் நன்றாக கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3-4 மாதங்கள் குடித்து வந்தால் உடல் எடையை மிக எளிதில் குறைத்துவிட முடியும்.
 • ஒரு கையளவு கருவேப்பிலை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முடி நன்றாக வளரும். அடர்த்தியாக காணப்படும், முடி உதிர்வதை தடுத்து, முடி நன்கு வளர வழிவகுக்கிறது.
 • தினமும் மூன்று கப் தண்ணீரில் மிளகு, சீரகம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து மூன்று வேளை குடித்து வந்தால் கடுமையான இருமல் குணமாகும். இந்த தண்ணீரை குழந்தைகளும் கூட குடிக்கலாம்.
 • பல் வலி உள்ளவர்கள் சிறிதளவு துளசி இலை, மிளகு, கொஞ்சம் உப்பு இவற்றை அனைத்தையும் வலி உள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் பல் வலி குணமாகும்.
 • குளிக்கும் போது தண்ணீரில் கொஞ்சம் துளசி இலையை போட்டு குளித்து வந்தால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.
 • முகத்தில் கொஞ்சம் துளசி சாறு தேய்த்து வந்தாலும் முகத்தில் உள்ள அனைத்து சரும பிரச்னைகளும் மறையும்.
 • கேரட் மற்றும் தக்காளி சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தை சுறுசுறுப்பாகவும் மிக வலிமையாகவும் இருப்பார்கள்.
 • வயிற்றுப் போக்கு உடனே குணமாக ஒரு எளிய மருந்தாக விளங்குகிறது கொய்யாய் இலை. இந்த இலையை வெறும் வாயில் மென்று சாப்பிட்டால் உடனே வயிற்றுப் போக்கு குறையும்.
 • கற்பூரவல்லி (ஓமவல்லி) 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால், மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும்.
 • மஞ்சள் கரிசலாங்கண்ணி காமாலை, கண் கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றுக்கு சிறந்தது. காயங்கள், புண்களுக்கு இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம்.
 • சளி, இருமல் தொல்லை நீங்க, துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். மூளை வளர்ச்சிக்கும் ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் சிறந்த டானிக் இது.
 • ரத்தச் சோகையைக் குறைக்கும். பசியை உண்டாக்கும். வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்து, காலையில் குடித்து வர குணமாகும்.

அனைவருக்கும் பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்..! இதோ சில எளிய குறிப்புக்கள் Source link

Related Post

தமிழ் விடுகதைகள்

100+ தமிழ் விடுகதைகள் (விடையுடன்)

Posted by - மார்ச் 17, 2021 0
100+ தமிழ் விடுகதைகள் (விடையுடன்) படிகக்க படிகக்க ஆர்வத்தை தூண்டும் சுவாரசியமான தமிழ் விடுகதைகள் விடையுடன். Tamil Vidukathaigal with Answer List of 100+Tamil Vidukathaigal…
- 4

ஞாபக சக்தி அதிகரிக்க சூரணம்

Posted by - அக்டோபர் 30, 2020 0
ஞாபக சக்தி அதிகரிக்க சூரணம் ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும். இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது…
- 6

மலச்சிக்கலை போக்கும் காய்: உடனடி பலன் கிடைக்கும்

Posted by - நவம்பர் 22, 2020 0
மலச்சிக்கலை போக்கும் காய்: உடனடி பலன் கிடைக்கும் பழங்கால மருத்துவத்தில் பயன்படும் கடுக்காய் அதிக மருத்துவ தன்மை கொண்டது. கடுக்காயை எப்படி பயன்படுத்த வேண்டும்? 1/2 தேக்கரண்டி…
- 12

உடலில் சர்க்கரையின் அளவை குறைக்க இந்த பழத்தை நிறைய சாப்பிடுங்க! நிச்சயம் பலன் கிட்டும்!

Posted by - பிப்ரவரி 12, 2021 0
உடலில் சர்க்கரையின் அளவை குறைக்க இந்த பழத்தை நிறைய சாப்பிடுங்க! நிச்சயம் பலன் கிட்டும்! நாவல் பழம், கடவுளின் பழம் என்று இந்தியாவில் போற்றப்படுகிறது. இப்பழம் இனிப்பு…
- 14

உடலை நோய்கள் தாக்காமல் இருக்க எந்த நேரத்தில் எந்த டீ குடிக்கணும் தெரியுமா?

Posted by - ஏப்ரல் 20, 2020 0
Wellness lekhaka-Saravanan kirubananthan | Updated: Monday, April 20, 2020, 11:44 [IST] இந்தியர்களுக்கு தேநீர் என்பது சுவையான பானம் மட்டுமல்ல. அது ஒரு உணர்வு.…

உங்கள் கருத்தை இடுக...