அதென்ன Capital receipt..? பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..!

அதென்ன Capital receipt..? பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..!

Capital receipt

Capital receipt

இந்திய அரசுக்கு என்று ஒரு கேப்பிட்டல் அக்கவுண்ட் இருக்கிறது. அந்தக் கணக்கில் வரும் வரவுகள் எல்லாமே கேப்பிட்டல் ரெசிப்ட் தான். உதாரணமாக, மத்திய அரசு நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், எல் ஐ சி போன்ற நிறுவனங்களின் பங்குகளை விற்றால் கிடைக்கும் பணம் இந்த கேப்பிட்டல் ரெசிப்ட் கணக்குக்குத் தான் வரும்.

Capital expenditure

Capital expenditure

மேலே கேப்பிட்டல் ரெசிப்ட்டுக்கு சொன்னதுக்கு எதிராக நடந்தால் அது Capital expenditure. உதாரணமாக, ஏதாவது சொத்து பத்துக்களை வாங்க, மத்திய அரசு செலவழிக்கிறது என்றால், அதற்கு பணம், மத்திய அரசின் கேப்பிட்டல் அக்கவுண்டில் இருந்து தான் பணம் போகும். ஆகையில் தான் அதை Capital expenditure என்கிறார்கள்.

Revenue receipt

Revenue receipt

மத்திய அரசுக்கு வரிகள் மூலமாகவோ அல்லது ஈவுத் தொகை, வட்டி மூலமாகவோ வரும் வருவாய்களைத் தான் Revenue receipt என்கிறோம். அப்படி வரும் வருவாய்களை கணக்கில் கொண்டு வர பயன்படுத்தும் சொல் தான் இந்த Revenue receipt.

Revenue expenditure

Revenue expenditure

வந்த வருவாயை அப்படியே வைத்திருக்க முடியுமா..? அடுத்தடுத்து அரசாங்கத்துக்கு செலவுகள் இருக்கத் தானே செய்யும். அந்த செலவுகளை எல்லாம் எப்படி கணக்கிடுவார்கள் என்று கேட்டால் அதற்கான விடை தான் Revenue expenditure.

Ways and means advance (WMA)

Ways and means advance (WMA)

மத்திய அரசோ மாநில அரசோ, கொஞ்சம் பட்ஜெட்டில் துண்டு விழுகிறது என்றால், ஆர்பிஐ ஒரு வங்கி போல செயல்பட்டு கடன் கொடுக்கும். அப்படி கொடுக்கப்படும் கடனின் பெயர் தான் Ways and means advance (WMA). பொதுவாக இந்த ரக கடன்கள், மத்திய அல்லது மாநில அரசின் தற்காலிக வரவு செலவு பற்றாக்குறைகளைச் சரி செய்து கொள்ள உதவும்.

Subvention

Subvention

இதை நாம் அடிக்கடி கேள்விப்படும் சொல் தான். அரசு மானியம் கொடுப்பதை பார்த்திருக்கிறோம். இல்லையா..? அதன் மறு பெயர் தான் இந்த Subvention. உதாரணம்: வங்கிகளில் Interest Subvention கடன்களை வழங்குவார்கள். உதாரணமாக, நமக்கு 10% வட்டிக்கு வங்கிகள் கடன் கொடுக்கும், ஆனால் நாம் 7% செலுத்தினால் போதும், மீதமுள்ள 3% அரசு நமக்கு பதிலாக செலுத்திக் கொள்ளும்.

Financial Inclusion

Financial Inclusion

இந்தியாவில் இருக்கும் கடைக் கோடி மக்கள் வரை, இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவை கிடைக்க வேண்டும். அவர்களும் வங்கிகளின் பலன்களைப் பெற வேண்டும். அதைத் தான் ஆங்கிலத்தில் Financial Inclusion என்கிறார்கள். ஜன் தன் திட்டம் இந்த Financial Inclusion-க்கு ஒரு நல்ல உதாரணம்.

அதென்ன Capital receipt..? பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..!

VIew Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart