அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?

ரியல்மி நிறுவனம் புதிதாக C17 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இது எவ்வளவு ரூபாய் இருக்கும், என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்பது பற்றி இங்குக் காணலாம்.

ரியல்மி நிறுவனம் அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட்போன்களை களம் இறக்கி வருகிறது. 6 மாதத்திற்கு ஒரு ஸ்மார்ட்போன், 3 மாத்திற்கு ஒரு ஸ்மார்ட்போன் என்ற கதையெல்லாம் மாறி, இப்போது மாதத்திற்கு 3 ஸ்மார்ட்போன்களை களம் இறக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் புதிதாக ரியல்மி C17 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி C17 சிறப்பம்சங்கள்:

ரியல்மி C17 ஸ்மார்ட்போனை படங்களைக் குறித்து முகுல் ஷர்மா டீஸ் செய்துள்ளார். அதன்படி, இதில் 6.5 இன்ச் அளவிலான ஹோல் பஞ்ச் டிஸ்பிளே, 90Hz ரெவ்ரெஷ் ரேட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 460 பிராசசர், அட்ரீனோ 610 GPU உடன் வரலாம்.

கேமராவைப் பொருத்தவரையில் 13 மெகா பிக்சலுடன் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சலுடன் கூடிய 119 டிகிரி வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகா பிக்சல் மோனோகுரோம் கேமரா உள்ளன.  லேக் கிரீன், நேவி ப்ளூ ஆகிய நிறங்களில் இது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரல் ரேகை சென்சார், பேட்டரி சக்தி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும். .


Redmi Note 8 or Realme 5s: Which is the best phone under Rs. 10,000 in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Read Full News @ Gadgets-360

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart