அடடே இது நல்ல விஷயம் தான்.. அமேசானில் ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ்..!

அடடே இது நல்ல விஷயம் தான்.. அமேசானில் ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ்..!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் எதற்கு இன்சூரன்ஸ் எடுக்கிறோமோ இல்லையோ? நிச்சயம் இரு சக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஏனெனில் எங்கு எப்போது எந்த மாதிரியான பிரச்சனை வரும் என்பதை கணிக்கவே முடியாது. இன்னும் சொல்லப்போனால் ஏனெனில் வாகனங்களில் செல்லும்போது நீங்கள் சரியாக சென்றாலும் கூட, எதிரில் வருபவர் சரியாக செல்வார்களா? என்பதை உறுதி செல்ல முடியாது.

அடடே இது நல்ல விஷயம் தான்.. அமேசானில் ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ்..!

தற்போது விரிவு செய்யப்பட்ட ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. சில நிறுவனங்கள் ஆன்லைனிலும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியினை விற்று வருகின்றன.

இந்த நிலையில் ஆன்லைன் ஈ-காமர்ஸ் ஜாம்பவான் ஆன அமேசான் நிறுவனமும் வாகன இன்சூரன்ஸ்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்தியில் அமேசான்.காம் இன்க் நிறுவனம் வாகன இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றிற்கு இன்சூரன்ஸ் திட்டத்தினை வழங்க இந்திய கிளையில் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக அமேசான் பே நிறுவனம், இந்தியாவின் அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த இன்சூரன்ஸ் பாலிசியினை அமேசானில் இணையதளத்திலும், அதோடு அமேசானில் மொபைல் ஆப்பிலும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஆன்லைன் இன்சூரன்ஸ் சேவையில் சாப்ட் பேங்கின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஸ்டார்டப் நிறுவனமான பாலிசி பஜாருக்கு போட்டியாக, இந்த அமேசான் இன்சூரன்ஸ் திட்டம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சந்தைகளில் ஒன்றான அமேசான் நிச்சயம் மற்ற, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல நிறுவனங்களுக்கு மத்தியில் பல போட்டியாளர்களைக் கொண்டுள்ள இன்சூரன்ஸ் துறைக்கு இது போறாத காலமே. ஏனெனில் அமேசான் இன்சூரன்ஸ் துறையில் இல்லாவிட்டாலும், ஏற்கனவே பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. எனினும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பல ஒழுங்குமுறை தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

அடடே இது நல்ல விஷயம் தான்.. அமேசானில் ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ்..!

VIew Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password