ஃபேஸ்புக்கில் எழுதி இனி சம்பாதிக்கவும் செய்யலாம்… விரைவில் வரப்போகும் Newsletter சேவை!

வாசகரை நேரடியாகச் சென்றடைவதும், சந்தாத் தொகை எந்தத் தடையும் இன்றி வாசகரிடமிருந்து நேரடியாக எழுதுபவருக்குச் சென்றடைவதும் இந்தச் செய்திமடல் தளங்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் தனி சாம்ராஜ்யம் நடத்துகிறது. பயனர்களைத் தக்கவைக்க புதிதாகப் பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் ஃபேஸ்புக், அது சார்ந்த விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுயாதீன எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான புதிய செய்திமடல் (Newsletters) தளம் ஒன்றைத் தொடங்கவிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

எந்தத் தணிக்கையும் இன்றி, கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு இந்தச் செய்திமடல்கள் வழிசெய்கின்றன. இதனால், வெகுஜன ஊடகங்கள் இடமளிக்காத தீவிரமான விஷயங்களைப் பேச உலகம் முழுக்கச் சுயாதீன எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் இந்தச் செய்திமடல்களைக் கையிலெடுத்தனர். வாசகரை நேரடியாகச் சென்றடைவதும், சந்தாத் தொகை எந்தத் தடங்கலும் இன்றி வாசகரிடமிருந்து நேரடியாக எழுதுபவருக்குச் சென்றடைவதும் இந்தச் செய்திமடல் தளங்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.

வருகிற மாதங்களில், முதலில் அமெரிக்காவில் இத்திட்டத்தை பேஸ்புக் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. இதற்கிடையே Revue என்ற செய்திமடல் கருவியை ட்விட்டர் சமீபத்தில் கையகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart