ஃபிளைட் மோடு இல்லாமல் எப்படி உங்கள் போனிற்கு வரும் இன்கம்மிங் கால்ஸ்-களை நிறுத்துவது?
ஃபிளைட் மோடு இல்லாமல் எப்படி உங்கள் போனிற்கு வரும் இன்கம்மிங் கால்ஸ்-களை நிறுத்துவது?
இந்த நேரத்தில் இன்கம்மிங் கால் வருவதை நாம் விரும்புவதில்லை
சாதாரண குரல் அழைப்புகளால் கூட பயனர்கள் தொந்தரவு அடைய விரும்பாத நேரங்கள் என்று சில உள்ளது, குறிப்பாக கேம் விளையாடும்போது, OTT தளங்களில் திரைப்படங்கள் பார்க்கும் போது அல்லது நீங்கள் நண்பர்களுடன் வெளியே இருக்கும்போது அல்லது முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது என்று பட்டியல் நீளும். சிலர் அழைப்புகள் வருவதை மொத்தமாக விரும்புவதில்லை. இப்படியானவர்களுக்கு எப்படி இன்கம்மிங் கால்களை நிறுத்துவது என்று இந்த பதிவின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

இன்கம்மிங் அழைப்புகளை எப்படி நிறுத்துவது?
இன்கம்மிங் அழைப்புகள் நிறுத்த வேண்டும் என்று கூறியதும், பெரும்பாலானோர் ஃபிலைட் மோடு ஆன் செய்தால் போதும் என்று நினைத்திருப்பீர்கள். அதை தான் நாம் இங்கே செய்யப் போவது இல்லை, ஃபிளைட் மோடு பயன்படுத்தாமல் எப்படி உங்களுக்கு வரும் இன்கம்மிங் அழைப்புகளை நிறுத்துவது என்று தான் பார்க்கப்போகிறோம். சரி விஷயத்திற்கு நேரடியாக செல்லாம். உங்கள் மொபைல் எண்களுக்கு வரும் இன்கம்மிங் அழைப்புகளை எப்படி நிறுத்துவது?
பிரளய பூகம்பம் : நாளைக்கூட ஏற்படலாம், புதைந்து கிடைக்கும் ஆபத்து..!

call settings மூலம் இதை எப்படி செய்வது?
உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ‘call settings’ என்ற அழைப்பு அமைப்புகளுக்குச் செல்லவும். ஒவ்வொரு சாதனத்திற்கும் இது வேறுபட்டது. பின்னர் call forwarding விருப்பத்தை கிளிக் செய்யவும். நீங்கள் அதைக் கிளிக் செய்தவுடன், ‘always forward’, ‘forward when busy’ மற்றும் ‘forward when unanswered’ ஆகிய மூன்று விருப்பங்களைக் காண்பீர்கள். இதில் always forward என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.

ஃபிளைட் மோடு வேண்டாம் என்று சொன்னதுக்கு இது தான் காரணம்
சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட அல்லது இணைப்பு இல்லாத எண்ணை உள்ளிடவும். பின்னர், enable பட்டனை கிளிக் செய்க. இது உங்கள் எண்ணில் உள்ள அனைத்து அழைப்புகளையும் நிறுத்தும். எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் மொபைல் டேட்டாவையும் பயன்படுத்தலாம். இந்த காரணத்தினால் தான் நாம் ஃபிளைட் மோடு ஆக்டிவேட் செய்யும் முறையை பரிந்துரைக்கவில்லை. ஃபிளைட் மோடில் டேட்டா சேவையை நீங்கள் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போலோ 20 ரகசியம் அம்பலம் : நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்.!!

உங்களின் இன்கம்மிங் அழைப்புகளை நிறுத்த கூடுதல் வழிகள்
உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள settings சென்று, ‘Sound’ என்பதைத் கிளிக் செய்யவும். ‘Do Not Disturb’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து Calls என்பதைக் கிளிக் செய்க. நீங்கள் Calls தட்டியதும், பாப்அப் மெனுவிலிருந்து ‘Do not allow any calls’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘allow repeat callers’ என்பதை நிலை மாற்றுங்கள்.

கால் பேரிங் (call barring) அம்சம்
அதேபோல், நீங்கள் ‘கால் பேரிங் (call barring)’ முறையையும் பயன்படுத்தலாம். அதற்காக, உங்கள் தொலைபேசி பயன்பாட்டைத் திறந்து, திரையின் மேல் வலது மூலையில் உள்ள ‘menu overflow button’ என்ற மூன்று புள்ளிகள் கொண்ட விருப்பத்தை கிளிக் செய்யவும்.

கால் நிறுத்தம் செய்ய தேவைப்படும் பாஸ்வோர்டு இது தான்
பொதுவாக Android சாதனங்களுக்கு, பிற சாதனங்களுக்கு இது வேறுபட்டது. பின்னர் Settings கிளிக் செய்து, Calls என்பதைக் கிளிக் செய்யவும். அழைப்புகள் மெனுவுக்குள், ‘கால் பேரிங்’ விருப்பத்தை கிளிக் செய்யவும். உள்வரும் அனைத்து அழைப்புகளையும் நிறுத்த all incoming calls கிளிக் செய்து பாஸ்வோர்டை உள்ளிடவும். பெரும்பாலும் 0000 அல்லது 1234 என்பது தான் பாஸ்வோர்டாக இருக்கும். பின்னர் ‘ஆன்’ என்பதை கிளிக் செய்து முடிக்கவும்.
ஃபிளைட் மோடு இல்லாமல் எப்படி உங்கள் போனிற்கு வரும் இன்கம்மிங் கால்ஸ்-களை நிறுத்துவது? Source link
Tags: How to Tech